Enna Thiyaakam - என்ன தியாகம் - Christking - Lyrics

Enna Thiyaakam - என்ன தியாகம்


என்ன தியாகம், என், கல்வாரி நாயகா!
என்னையும் உம்மைப்போல் மாற்றிடவோ!

1. விண் தூதர் போற்றிடும் உம் – பிதாவையும்
விட்டிறங்கி வந்தீரே!
மாட்டுக் கொட்டிலோ வாஞ்சித்தீரையா!
மானிடர் மேல் அன்பினால்

2. ஜெனித்த நாள் முதலாய் – கல்வாரியில்
ஜீவனை ஈயும் வரை
பாடுகள் உம் பங்காய்க் கண்டீரையா!
பாவியை மீட்பதற்காய்

3. தலையைச் சாய்த்திடவோ – உமக்கு ஓர்
தலமோ எங்குமில்லை
உம் அடிச்சுவட்டில் நான் செல்லவோ!
முன் பாதை காட்டினீரே

4. தாய் தந்தை வீடும் நாடும் – இன்னும்
தனக்குள்ளதெல்லாம் வெறுத்து
அனுதினம் குருசை சுமப்பவரல்லோ!
அப்போஸ்தலர் என்றீரே

5. பாடுகளல்லோ உம்மை – மகிமையில்
பூரணமாய்ச் சேர்த்ததே
உம்மோடு நானும் பாடு சகிப்பேன்!
என் ஜீவனையும் வைத்தே

6. இன்பம் எனக்கினியேன் – என் அருமை
இயேசுதான் என் பங்கல்லோ!
நேசரின் பின்னே போகத்துணிந்தேன்
பாசம் என்னில் வைத்ததால்


Enna Thiyaakam, en, Kalvaari Naayakaa!
Ennaiyum Ummaippol Maattidavo!

1. Vinn Thoothar Pottidum Um – Pithaavaiyum
Vittirangi Vantheerae!
Maattuk Kottilo Vaanjiththeeraiyaa!
Maanidar Mael Anpinaal

2. Jeniththa Naal Muthalaay – Kalvaariyil
Jeevanai Eeyum Varai
Paadukal Um Pangaayk Kannteeraiyaa!
Paaviyai Meetpatharkaay

3. Thalaiyaich Saayththidavo – Umakku or
Thalamo Engumillai
Um Atichchuvattil Naan Sellavo!
Mun Paathai Kaattineerae

4. Thaay Thanthai Veedum Naadum – Innum
Thanakkullathellaam Veruththu
Anuthinam Kurusai Sumappavarallo!
Apposthalar Enteerae

5. Paadukalallo Ummai – Makimaiyil
Pooranamaaych Serththathae
Ummodu Naanum Paadu Sakippaen!
En Jeevanaiyum Vaiththae

6. Inpam Enakkiniyaen – en Arumai
Yesuthaan en Pangallo!
Naesarin Pinnae Pokaththunninthaen
Paasam Ennil Vaiththathaal

Enna Thiyaakam - என்ன தியாகம் Enna Thiyaakam - என்ன தியாகம் Reviewed by Christking on August 02, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.