Enna Sugam Ahaha - என்ன சுகம் ஆஹா
- TAMIL
- ENGLISH
என்ன சுகம் ஆஹா, என்ன சுகம்
என் ரட்சகரின் சமூகம் பேரானந்தம்
பரமானந்த மோட்ச சுகானந்தம்
அதைப் பெற்று அனுபவித்தால் என்ன சுகம்
சரணங்கள்
1. பொன்னகர் மேடையில் எந்நேரம் பாடலாம் (2)
கிண்ணரம் தம்புருவீணை இன்னோசை கேட்கலாம்
— என்ன சுகம்
2. வெற்றி பொன் வெண் அங்கி தரித்துக் கொள்ளலாம் (2)
சுத்தப் பொன்னால் செய்த வீதியில் உலாவலாம்
— என்ன சுகம்
3. ஜீவ நதியில் குளித்துக் களிக்கலாம் (2)
ஜீவ விருஷக் கனியைப் புசிக்கலாம்
— என்ன சுகம்
4. தங்கக் கிரீடம் தலையில் தரிக்கலாம் (2)
சிங்காசனத்தினின்று ஜெயகீதம் பாடலாம்
— என்ன சுகம்
5. வாட்டம் பசி தாகம் பட்டினி சாவில்லை (2)
கேட்டின் மனுடர் வந்து ஊடே யிருப்பதில்லை
— என்ன சுகம்
6. துன்பம் ஒழிந்து மீட்பு இன்பமடையலாம் (2)
துயரின் சமூகத்தில் கூடி கொண்டாடலாம்
— என்ன சுகம்
7. இயேசுவின் ரத்தத்தால் மீட்பை யடைந்தவர்கள் (2)
ஆசனம் மீதிருந்து ஜெயகீதம் பாடுவார்கள்
— என்ன சுகம்
Enna Sukam Aahaa, Enna Sukam
En Ratchakarin Samookam Paeraanantham
Paramaanantha Motcha Sukaanantham
Athaip Pettu Anupaviththaal Enna Sukam
1. Ponnakar Maetaiyil Ennaeram Paadalaam (2)
Kinnnaram Thampuruveennai Innosai Kaetkalaam
— Enna Sukam
2. Vetti Pon Venn Angi Thariththuk Kollalaam (2)
Suththap Ponnaal Seytha Veethiyil Ulaavalaam
— Enna Sukam
3. Jeeva Nathiyil Kuliththuk Kalikkalaam (2)
Jeeva Virushak Kaniyaip Pusikkalaam
— Enna Sukam
4. Thangak Kireedam Thalaiyil Tharikkalaam (2)
Singaasanaththinintu Jeyageetham Paadalaam
— Enna Sukam
5. Vaattam Pasi Thaakam Pattini Saavillai (2)
Kaettin Manudar Vanthu Ootae Yiruppathillai
— Enna Sukam
6. Thunpam Olinthu Meetpu Inpamataiyalaam (2)
Thuyarin Samookaththil Kooti Konndaadalaam
— Enna Sukam
7. Yesuvin Raththaththaal Meetpai Yatainthavarkal (2)
Aasanam Meethirunthu Jeyageetham Paaduvaarkal
— Enna Sukam
Enna Sugam Ahaha - என்ன சுகம் ஆஹா
Reviewed by Christking
on
August 02, 2020
Rating:
No comments: