Enna Bakkiyam Yevarkundu Intha Silakiyam
- TAMIL
- ENGLISH
என்ன பாக்கியம், எவர்க்குண்டு
இந்தச் சிலாக்கியம்?
அனுபல்லவி
விண்ணவரும், புவிமேவும் முனிவர்களும்,
மன்னவருங் காணா மகிபனை யான் கண்டேன் — என்ன
சரணங்கள்
1. வானகந் தானோ – அல்லதிது – வையகந் தானோ?
ஆனகம் சென்று எழுந்த அரும்பொருள்
கானகந் தன்னில் என் கையில் அமர்ந்தது
— என்ன
2. சாமியைக் கண்டேன் – மகானந்தம் – சாலவுங்கொண்டேன்,
காமரு தேங்கனி வாய்கள் துடிப்பதும்,
கண்ணும் மனமும் களிக்க விழிப்பதும்
— என்ன
3. அன்னமும் நீயே – கிடைத்தற்கருஞ் சொன்னமும் நீயே
மின்னறு மேகத் திருக்கை துறந்தையோ?
மேதினி தன்னை ரட்சிக்கப் பிறந்தையோ?
— என்ன
4. போதும் இவ்வாழ்வு – பரகதி – போவேன் இப்போது
ஏதேன் என்ற பரதீசும் வந்திட்டது
எண்ணில்லாத செல்வம் என் கையில் கிட்டுது
— என்ன
Enna Paakkiyam, Evarkkunndu
Inthach Silaakkiyam?
Anupallavi
Vinnnavarum, Puvimaevum Munivarkalum,
Mannavarung Kaannaa Makipanai Yaan Kanntaen
— Enna
Saranangal
1. Vaanakan Thaano – Allathithu - Vaiyakan Thaano?
Aanakam Sentu Eluntha Arumporul
Kaanakan Thannil en Kaiyil Amarnthathu
— Enna
2. Saamiyaik Kanntaen – Makaanantham – Saalavunganntaen
Kaamaru Thaengani Vaaykal Thutippathum,
Kannnum Manamum Kalikka Vilippathum
— Enna
3. Annamum Neeyae – Kitaiththarkarunj Sonnamum Neeyae
Minnatru Maekath Thirukkai Thuranthaiyo?
Maethini Thannai Ratchikkap Piranthaiyo?
— Enna
4. Pothum Ivvaalvu – Parakathi – Povaen Ippothu
Aethaen Enta Paratheesum Vanthittathu
Ennnnillaatha Selvam en Kaiyil Kittuthu
— Enna
Enna Bakkiyam Yevarkundu Intha Silakiyam
Reviewed by Christking
on
August 01, 2020
Rating:
No comments: