Desathin Azlivin Kookural - தேசத்தின் அழிவின் கூக்குரல் | - Christking - Lyrics

Desathin Azlivin Kookural - தேசத்தின் அழிவின் கூக்குரல் |



1. தேசத்தின் அழிவின் கூக்குரல் உன்னை
அசைத்திடவில்லையோ
தேவனின் இதய கதறலை உந்தன்
செவிகள் கேட்கலையோ
இந்த காலம் உனதல்லவோ
நீ செயல்படும் நேரமல்லவோ

ஜாமக்காரனே! ஜாமக்காரனே!
எழும்பிடு எழும்பிடு திறப்பிலே நின்றிடு
எழும்பிடு எழும்பிடு தேசத்தைக் காத்திடு

2. ஆமானின் சதிகள் அனைத்தையும் வெல்ல
மன்றாடி ஜெபித்திடு
கல்வாரி அன்பை தேசங்கள் அறிய
கதறியே ஜெபித்திடு
முழங்காலில் யுத்தம்செய்திடு
சிறைப்பட்டோரை விடுவித்திடு

3. கர்த்தரே தெய்வம் என்ற முழக்கம்
தேசத்தில் கேட்டிடும்
அக்கினி இறங்கும் பெருமழை பொழியும்
காரிருள் நீங்கிடும்
உலகெங்கும் ஒளி வீசிடு
பெரும் மாற்றத்தின் விதையாகிடு


English


Desathin Azlivin Kookural - தேசத்தின் அழிவின் கூக்குரல் | Desathin Azlivin Kookural - தேசத்தின் அழிவின் கூக்குரல் | Reviewed by Christking on August 25, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.