Um Anbila - உம் அன்பில | Super Singer Sinmaye Sivakumar - Christking - Lyrics

Um Anbila - உம் அன்பில | Super Singer Sinmaye Sivakumar



உம் அன்பில உம் அன்பில
என்றும் மூழ்கிடுவேன்
உம் மார்பில உம் மார்பில-நான்
தினமும் சாய்ந்திடுவேன்-2

வாழ்வு முடிந்திடும் மண்ணில
உம்மிடம் சேர்வேன் விண்ணில
திருப்தி அடைவேன் நித்தியமாய்
உம் மடியினில அந்நாளினில
-உம் அன்பில

1.உம்மை சேரும் நேரத்தில
கண்ணீர் மறையும் கண்களில
உமது வார்த்தை உசுரு போல
கலந்திட்டது எனக்குள்ள
உலகில் பட்ட பாடுகளை
மறப்பேன் உம் அரவணைப்பால
உம்மையன்றி பூமியில
வேற யாரும் எனக்கு இல்ல-3
-உம் அன்பில

2.சூரியன் அங்கு தேவையில்ல
உமது மகிமை இருக்கையில
ஏதேன் தோட்ட பரிமாணம்
மீண்டும் தொடரும் அந்தகனம்
என்னை மீட்க பட்ட காயம்
காணத்துடிக்குது என் இதயம்
எனது ஏக்கமோ நான் அங்கே
நித்தியமாய் தங்க தானே-3
-உம் அன்பில


English


Um Anbila - உம் அன்பில | Super Singer Sinmaye Sivakumar Um Anbila - உம் அன்பில | Super Singer Sinmaye Sivakumar Reviewed by Christking on July 25, 2020 Rating: 5

2 comments:

Powered by Blogger.