Eliyaavin Thaevan Nam Thaevan - எலியாவின் தேவன் நம் தேவன் - Christking - Lyrics

Eliyaavin Thaevan Nam Thaevan - எலியாவின் தேவன் நம் தேவன்


எலியாவின் தேவன் நம் தேவன்
வல்லமையின் தேவன் நம் தேவன்
தாசர்களின் ஜெபம் கேட்பார்
வல்ல பெரும் காரியம் செய்திடுவார்

கர்த்தரே தேவன் கர்த்தரே தேவன்
என்றே ஆர்ப்பரிப்போம் – 2

1. வேண்டிடும் பக்தர்களின் ஜெபம் கேட்டே
பனிமழை நிறுத்தினார் வல்ல தேவன்
பஞ்ச காலத்தில் விதவை வீட்டில்
பாத்திரங்களை அவர் ஆசீர்வதித்தார்

2. சத்துருக்கள் முன்னிலையில் தேவ மனிதன்
வீரமுடன் முழங்கினார் தேவ மனிதன்
அக்கினியால் பதிலளிக்கும்
தேவனே தேவன் என்றார் தேவ மனிதன்

3. வானங்களை திறந்தே வல்ல தேவன்
அக்கினியால் பதில் தந்தார் ஜீவ தேவன்
கர்த்தரே தேவன் கர்த்தரே தேவன்
என்றே பணிந்தனர் தேவ ஜனங்கள்


Eliyaavin Thaevan Nam Thaevan
Vallamaiyin Thaevan Nam Thaevan
Thaasarkalin Jepam Kaetpaar
Valla Perum Kaariyam Seythiduvaar
Karththarae Thaevan Karththarae Thaevan
Ente Aarpparippom – 2

1. Vaenndidum Paktharkalin Jepam Kaettae
Panimalai Niruththinaar Valla Thaevan
Panja Kaalaththil Vithavai Veettil
Paaththirangalai Avar Aaseervathiththaar

2. Saththurukkal Munnilaiyil Thaeva Manithan
Veeramudan Mulanginaar Thaeva Manithan
Akkiniyaal Pathilalikkum
Thaevanae Thaevan Entar Thaeva Manithan

3. Vaanangalai Thiranthae Valla Thaevan
Akkiniyaal Pathil Thanthaar Jeeva Thaevan
Karththarae Thaevan Karththarae Thaevan
Ente Panninthanar Thaeva Janangal

Eliyaavin Thaevan Nam Thaevan - எலியாவின் தேவன் நம் தேவன் Eliyaavin Thaevan Nam Thaevan - எலியாவின் தேவன் நம் தேவன் Reviewed by Christking on July 28, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.