Ebiraeyargalin Siruvar Kulam - எபிரேயர்களின் சிறுவர் குழாம் - Christking - Lyrics

Ebiraeyargalin Siruvar Kulam - எபிரேயர்களின் சிறுவர் குழாம்


எபிரேயர்களின் சிறுவர் குழாம்

ஒலிவக் கிளைகள் பிடித்தவராய்

உன்னதங்களிலே ஓசான்னா

என்று முழங்கி ஆர்ப்பரித்து

ஆண்டவரை எதிர் கொண்டனரே

மண்ணுலகும் அதில் நிறைந்த யாவும் ஆண்டவருடையன

பூவுலகும் அதில் வாழும் குடிகள் யாவரும்

அவர் தம் உடைமையே

ஏனென்றால் கடல்களின் மீது பூவுலகை

நிலை நிறுத்தியவர் அவரே

ஆறுகளின் மீது அதை நிலை நாட்டியவர் அவரே

ஆண்டவர் மலைமீது ஏறிச் செல்லத் தகுந்தவன் யார்?

அவரது திருத்தலத்தில் நிற்கக் கூடியவன் யார்?

மாசற்ற செயலினன் தூய உள்ளத்தினன் பயனற்றதில்

மனத்தைச் செலுத்தாதவன்

தன் அயலானுக்கு எதிராக வஞ்சகமாய் ஆணையிடாதவன்

இவனே ஆண்டவரிடம் ஆசி பெறுவான்

இவனே தன்னைக் காக்கும்

ஆண்டவரின் மீட்பு அடைவான்

இறைவனைத் தேடும் மக்களினம் இதுவே

யாக்கோபின் கடவுளது திருமுகம் நாடுவோர் இவர்களே

வாயில்களே உங்கள் நிலைகளை உயர்த்துங்கள்

பழங்காலக் கதவுகளே உயர்ந்து நில்லுங்கள்

மாட்சிமிகு மன்னர் உள்ளே நுழையட்டும்

மாட்சிமிகு மன்னர் இவர் யாரோ

வீரமும் வலிமையும் கொண்ட ஆண்டவரே இவர்

போரில் வல்லவரான ஆண்டவரே இவர்


Epiraeyarkalin Siruvar Kulaam

Olivak Kilaikal Pitiththavaraay

Unnathangalilae Osaannaa

Entu Mulangi Aarppariththu

Aanndavarai Ethir Konndanarae

Mannnulakum Athil Niraintha Yaavum Aanndavarutaiyana

Poovulakum Athil Vaalum Kutikal Yaavarum

Avar Tham Utaimaiyae

Aenental Kadalkalin Meethu Poovulakai

Nilai Niruththiyavar Avarae

Aarukalin Meethu Athai Nilai Naattiyavar Avarae

Aanndavar Malaimeethu Aerich Sellath Thakunthavan Yaar?

Avarathu Thiruththalaththil Nirkak Kootiyavan Yaar?

Maasatta Seyalinan Thooya Ullaththinan Payanattathil

Manaththaich Seluththaathavan

Than Ayalaanukku Ethiraaka Vanjakamaay Aannaiyidaathavan

Ivanae Aanndavaridam Aasi Peruvaan

Ivanae Thannaik Kaakkum

Aanndavarin Meetpu Ataivaan

Iraivanaith Thaedum Makkalinam Ithuvae

Yaakkopin Kadavulathu Thirumukam Naaduvor Ivarkalae

Vaayilkalae Ungal Nilaikalai Uyarththungal

Palangaalak Kathavukalae Uyarnthu Nillungal

Maatchimiku Mannar Ullae Nulaiyattum

Maatchimiku Mannar Ivar Yaaro

Veeramum Valimaiyum Konnda Aanndavarae Ivar

Poril Vallavaraana Aanndavarae Ivar

Ebiraeyargalin Siruvar Kulam - எபிரேயர்களின் சிறுவர் குழாம் Ebiraeyargalin Siruvar Kulam - எபிரேயர்களின் சிறுவர் குழாம் Reviewed by Christking on July 28, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.