Devapitha Enthan - தேவப்பிதா எந்தன்
- TAMIL
- ENGLISH
தேவப்பிதா எந்தன் மேய்ப்பன் அல்லோ
சிறுமை தாழ்ச்சி அடைகிலேனே
ஆவலதாய் என்னைப் பைம்புல் மேல்
அவர் மேய்த்தமர் நீர் அருளுகின்றார்
ஆத்துமந்தன்னைக் குளிரப்பண்ணி
அடியேன் கால்களை நீதி யென்னும்
நேர்த்தியாம் பாதையில் அவர் நிமித்தம்
நிதமும் சுகமாய் நடத்துகின்றார்
சா நிழல் பள்ளத் திறங்கிடுனும்
சற்றம் தீங்கு கண்டஞ்சேனே
வானபரன் என்னோடிருப்பார்
வளை தடியும் கோலுமே தேற்றும்
பகைவர்க் கெதிரே ஒரு பந்தி
பாங்காய் எனக்கென்றேற் படுத்தி
சுக தைலம் கொண்டென் தலையை
சுகமாய் அபிஷேகம் செய்குவார்
ஆயுள் முழுவதும் என் பாத்ரம்
அருளும் நலமுமாய் நிரம்பும்
நேயன் வீட்டினில் சிறப்போடே
நெடுவாள் குடியாய் நிலைத்திருப்பேன்
Thaevappithaa Enthan Maeyppan Allo
Sirumai Thaalchchi Ataikilaenae
Aavalathaay Ennaip Paimpul Mael
Avar Maeyththamar Neer Arulukintar
Aaththumanthannaik Kulirappannnni
Atiyaen Kaalkalai Neethi Yennum
Naerththiyaam Paathaiyil Avar Nimiththam
Nithamum Sukamaay Nadaththukintar
Saa Nilal Pallath Thirangidunum
Sattam Theengu Kanndanjaenae
Vaanaparan Ennotiruppaar
Valai Thatiyum Kolumae Thaettum
Pakaivark Kethirae Oru Panthi
Paangaay Enakkenter Paduththi
Suka Thailam Konnden Thalaiyai
Sukamaay Apishaekam Seykuvaar
Aayul Muluvathum en Paathram
Arulum Nalamumaay Nirampum
Naeyan Veettinil Sirappotae
Neduvaal Kutiyaay Nilaiththiruppaen
Devapitha Enthan - தேவப்பிதா எந்தன்
Reviewed by Christking
on
July 01, 2020
Rating: