Athikalaiyil Dhinam Thedi - அதிகாலையில் தினம்தேடியே - Christking - Lyrics

Athikalaiyil Dhinam Thedi - அதிகாலையில் தினம்தேடியே


அதிகாலையில் தினம்தேடியே உம்
முகத்தினில் விழித்திடுவேன்
புதுகிருபை அதை தேடியே உம்
பாதத்தில் அமர்ந்திடுவேன்

ஆனந்தம் பேரின்பம் என்
அன்பரின் பாதத்திலே
ராஜா அல்லேலூயா என்
தேவா அல்லேலூயா

கரங்களை விரித்து கர்த்தரை பார்த்து
காலையில் பணிந்திடுவேன்
கவலையை மறந்து மகிழ்வுடன் இருந்து
மகிமையை செலுத்திடுவேன்
பாதத்திலே முகம் பதித்து
முத்தங்கள் செய்திடுவேன்

கதிரவன் வருமுன் கர்த்தரை தேட
கண்களும் விழித்திடுதே
உம்மனம் குளிர என் மனம் பாட
ஆயத்தமாகிடுதே
உம் வசனம் தியானித்திட
உள்ளம் காத்திடுதே

கண்ணிமை நேரம் உம்மை மறவாமல்
கருத்தாய் நினைத்திடவே
கனிவாய் இரங்கி கருணை ஈந்து
கரத்தால் அணைத்திடுமே
நாள் முழுதும் வல்லமையால்
நிதமும் நனைத்திடுமே


Athikaalaiyil Thinamthaetiyae Um
Mukaththinil Viliththiduvaen
Puthukirupai Athai Thaetiyae Um
Paathaththil Amarnthiduvaen

Aanantham Paerinpam en
Anparin Paathaththilae
Raajaa Allaelooyaa en
Thaevaa Allaelooyaa

Karangalai Viriththu Karththarai Paarththu
Kaalaiyil Panninthiduvaen
Kavalaiyai Maranthu Makilvudan Irunthu
Makimaiyai Seluththiduvaen
Paathaththilae Mukam Pathiththu
Muththangal Seythiduvaen

Kathiravan Varumun Karththarai Thaeda
Kannkalum Viliththiduthae
Ummanam Kulira en Manam Paada
Aayaththamaakiduthae
Um Vasanam Thiyaaniththida
Ullam Kaaththiduthae

Kannnnimai Naeram Ummai Maravaamal
Karuththaay Ninaiththidavae
Kanivaay Irangi Karunnai Eenthu
Karaththaal Annaiththidumae
Naal Muluthum Vallamaiyaal
Nithamum Nanaiththidumae

Athikalaiyil Dhinam Thedi - அதிகாலையில் தினம்தேடியே Athikalaiyil Dhinam Thedi - அதிகாலையில் தினம்தேடியே Reviewed by Christking on July 27, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.