Arokkiya Mathave Umathu Pugazh - ஆரோக்கிய மாதாவே உமது புகழ் - Christking - Lyrics

Arokkiya Mathave Umathu Pugazh - ஆரோக்கிய மாதாவே உமது புகழ்


ஆரோக்கிய மாதாவே உமது புகழ்
பாடித் துதித்திடுவோம் -எந்நாளும்
பாடித் துதித்திடுவோம் (2)

அலைகள் மோதிடும் கடற்கரை தனிலே
வசித்திட ஆசை வைத்தாயே (2)
பலவிதக் கலைகளும் பாரில் சிறந்திட
அனைவருக்கும் துணை புரிந்தாயே (2)

தேன் கமழும் சோலை சூழ்ந்து விளங்கும்
வேளாங்கண்ணியில் அமர்ந்தாயே (2)
வானுலகும் இந்த வையகமும் -அருள்
ஓங்கிட எங்கும் நிறைந்தாயே (2)

முடவன் தந்த மோரைப் பருகிக் கொண்டே -அவன்
குறைகளை நீக்கிட நினைத்தாயே (2)
நடந்திடக் கால்களும் நோயற்ற வாழ்வும்
இயேசுவின் அருளால் கொடுத்தாயே (2)

பாலன் இயேசுவின் பசியைப் போக்கவே
பசும்பால் வாங்கித் தந்தாயே (2) -இந்த
உலகம் உள்ளவரை உன்னை வேண்டிக்கொள்ளும்
அடிமைகள் வாழ்ந்திட அருள்புரிவாய் (2)

சக்தி விளங்கும் உந்தன் தரிசனம் கிடைத்தால்
சஞ்சலம் யாவும் தீர்ந்திடுமே (2)
பக்தியுடன் உன்னைப் பணிந்து போற்றுபவர்
வாழ்வினிலே இன்பம் நிறைந்திடுமே (2)

கவலையினால் மனம் வருந்தும் ஏழைகளின்
கண்ணீரைக் கனிவுடன் துடைத்தாயே (2) -நமது
நன்னாளில் வந்து தானங்கள் செய்பவர்
உன்னத நிலைபெற வைத்தாயே (2)


Aarokkiya Maathaavae Umathu Pukal
Paatith Thuthiththiduvom -ennaalum
Paatith Thuthiththiduvom (2)

Alaikal Mothidum Kadarkarai Thanilae
Vasiththida Aasai Vaiththaayae (2)
Palavithak Kalaikalum Paaril Siranthida
Anaivarukkum Thunnai Purinthaayae (2)

Thaen Kamalum Solai Soolnthu Vilangum
Vaelaangannnniyil Amarnthaayae (2)
Vaanulakum Intha Vaiyakamum -arul
Ongida Engum Nirainthaayae (2)

Mudavan Thantha Moraip Parukik Konntae -avan
Kuraikalai Neekkida Ninaiththaayae (2)
Nadanthidak Kaalkalum Nnoyatta Vaalvum
Yesuvin Arulaal Koduththaayae (2)

Paalan Yesuvin Pasiyaip Pokkavae
Pasumpaal Vaangith Thanthaayae (2) -intha
Ulakam Ullavarai Unnai Vaenntikkollum
Atimaikal Vaalnthida Arulpurivaay (2)

Sakthi Vilangum Unthan Tharisanam Kitaiththaal
Sanjalam Yaavum Theernthidumae (2)
Pakthiyudan Unnaip Panninthu Pottupavar
Vaalvinilae Inpam Nirainthidumae (2)

Kavalaiyinaal Manam Varunthum Aelaikalin
Kannnneeraik Kanivudan Thutaiththaayae (2) -namathu
Nannaalil Vanthu Thaanangal Seypavar
Unnatha Nilaipera Vaiththaayae (2)

Arokkiya Mathave Umathu Pugazh - ஆரோக்கிய மாதாவே உமது புகழ் Arokkiya Mathave Umathu Pugazh - ஆரோக்கிய மாதாவே உமது புகழ் Reviewed by Christking on July 27, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.