Appa Thayala Gunanandha - அப்பா தயாள குணாநந்த - Christking - Lyrics

Appa Thayala Gunanandha - அப்பா தயாள குணாநந்த


அப்பா தயாள குணாநந்த மோனந்த வேதா பொல்லா
இப்பாரில் காய்பாமுன் ஏகினீரோ ஏசுநாதா

குற்றம் சுமத்தப் பொய்ச் சாட்சிகளைத் தேடினாரோ
செற்றலர் எல்லாம் திரண்டேகமாய்க் கூடினாரோ

கன்னம் அதைத்ததோ கண்கள் சிவந்தவோ சுவாமீ -பொறி
மின்னிக் கலங்கி, விசனம் உற்றீரோ நன் னேமி

மெய்யான சாட்சி இட்டையனே சொன்ன உம் மீதே – தீயர்
பொய்யான சாட்சி இட்டையோ, சுமத்தினார் தீதே

என் கட்டைநீக்கிஈடேற்ற வாதைக்குள்ளானீரோ – உம்மைப்
பின் கட்டாய்க் கட்டி பிலாத்திடங்கொண்டு போனாரோ

இத்தனை பாடுகள் நீர் பட்ட தென்கொடும் பாவமே – என்றன்
கர்த்தனே உன் மீதில் வந்ததையோ தேவ கோபமே

நீர்பட்ட பாட்டைப்போல் ஆர் பட்டுத்தாங்குவார் தேவே – பல
கார்பட்ட நெஞ்சமும் சீர்பட்டுப் போகுமே கோவே


Appaa Thayaala Kunnaanantha Monantha Vaethaa Pollaa
Ippaaril Kaaypaamun Aekineero Aesunaathaa

Kuttam Sumaththap Poych Saatchikalaith Thaetinaaro
Settalar Ellaam Thiranntaekamaayk Kootinaaro

Kannam Athaiththatho Kannkal Sivanthavo Suvaamee -pori
Minnik Kalangi, Visanam Uttaro Nan Naemi

Meyyaana Saatchi Ittayanae Sonna Um Meethae – Theeyar
Poyyaana Saatchi Ittayo, Sumaththinaar Theethae

En Kattaneekkieetaetta Vaathaikkullaaneero – Ummaip
Pin Kattayk Katti Pilaaththidanganndu Ponaaro

Iththanai Paadukal Neer Patta Thenkodum Paavamae – Entan
Karththanae Un Meethil Vanthathaiyo Thaeva Kopamae

Neerpatta Paattappol Aar Pattuththaanguvaar Thaevae – Pala
Kaarpatta Nenjamum Seerpattup Pokumae Kovae

Appa Thayala Gunanandha - அப்பா தயாள குணாநந்த Appa Thayala Gunanandha - அப்பா தயாள குணாநந்த Reviewed by Christking on July 25, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.