Appa Arutkadale Varam - அப்பா அருட்கடலே வரம் - Christking - Lyrics

Appa Arutkadale Varam - அப்பா அருட்கடலே வரம்


அப்பா அருட்கடலே வரம்
துப்பாய் இவர்க்கருள்வாய்

செப்பரிதாகிய மெய்ப் பொருளை எங்கும்
சென்றறிவித்திட நிறைவாய்

பண்டு புறாவுருகொண்டு இறங்கிய
பான்மை இவர் சிரமீதே -திருத்
தொண்டு செய்யும்படி வல்லாவியால் முடி
சூட்ட இரங்கும் இப்போதே

நன்னயமாகவே பன்னிரு வேதியர்
நாவில் எழுந்துரை யாடிப் -பேயின்
சன்னதம் ஓய்ந்திடப் பண்ணியவாறிவர்
தம்மிலும் வந்தசை வாடி

இன்பாய் உலகை இமைக்குள் அமைத்தவர்
ஏவைக் குலங்கள் ஈடேறப்-பெருந்த
துன்பாய் இறந்த பேரன்பைத் தெளிவுறச்
சொல்லு முந்நூலினில் தேற

தேகமும் ஆவியும் ஜீவியம் யாவையும்
தீயவை அப்புறம் ஏகத்-திரி
யேகருக் கர்ப்பிதமாக ஒப்பிக்கும் நல்
எண்ணம் இவர்க்குள் உண்டாக.

முந்து நடுவு முடிவுமிலா ஒரு
மூவரில் அக்கினிக் கொழுந்தே-தேவ
சிந்தை இவரில் சிறந்தொளி வீசிடச்
செய்வதற் கிங்ங்னம் எழுந்தே


Appaa Arutkadalae Varam
Thuppaay Ivarkkarulvaay

Sepparithaakiya Meyp Porulai Engum
Sentariviththida Niraivaay

Panndu Puraavurukonndu Irangiya
Paanmai Ivar Sirameethae -thiruth
Thonndu Seyyumpati Vallaaviyaal Muti
Sootta Irangum Ippothae

Nannayamaakavae Panniru Vaethiyar
Naavil Elunthurai Yaatip -paeyin
Sannatham Oynthidap Pannnniyavaarivar
Thammilum Vanthasai Vaati

Inpaay Ulakai Imaikkul Amaiththavar
Aevaik Kulangal Eetaerap-peruntha
Thunpaay Irantha Paeranpaith Thelivurach
Sollu Munnoolinil Thaera

Thaekamum Aaviyum Jeeviyam Yaavaiyum
Theeyavai Appuram Aekath-thiri
Yaekaruk Karppithamaaka Oppikkum Nal
Ennnam Ivarkkul Unndaaka.

Munthu Naduvu Mutivumilaa Oru
Moovaril Akkinik Kolunthae-thaeva
Sinthai Ivaril Sirantholi Veesidach
Seyvathar Kingngnam Elunthae

Appa Arutkadale Varam - அப்பா அருட்கடலே வரம் Appa Arutkadale Varam - அப்பா அருட்கடலே வரம் Reviewed by Christking on July 25, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.