Annaiyae Arokkiya Annaiyae - அன்னையே ஆரோக்கிய அன்னையே
- TAMIL
- ENGLISH
அன்னையே ஆரோக்கிய அன்னையே அழகுள்ள வேளையில்
ஆலயம் கொண்ட எங்கள் அன்னையே – 2
கடலின் அலைகள் காவியம் பாடும்
கார்முகில் கூட்டம் கருணையைக் கூறும் – 2
மடல்விரி தாழையும் மணமது வீசும் – 2
மாதா உந்தன் மகிமையைச் சொல்லும்
பன்னிரு விண்மீன் முடியினைக் கொண்டாய்
பாதத்திற் கணியாய் நிலவினைப் பதித்தாய் – 2
உன்னிரு கரங்களில் உலகத்தின் ஒளியாம் – 2
உத்தமர் இயேசு பாலனைக் கொண்டாய்
உன் திருப்பாதம் தேடியே வந்தோம்
உன் எழில் கண்டு உள்ளத்தைத் தந்தோம் – 2
கண்ணென எம்மைக் காத்தருள்வாயே – 2
கர்த்தரின் தாயே துணை என்றும் நீயே
Annaiyae Aarokkiya Annaiyae Alakulla Vaelaiyil
Aalayam Konnda Engal Annaiyae – 2
Kadalin Alaikal Kaaviyam Paadum
Kaarmukil Koottam Karunnaiyaik Koorum – 2
Madalviri Thaalaiyum Manamathu Veesum – 2
Maathaa Unthan Makimaiyaich Sollum
Panniru Vinnmeen Mutiyinaik Konndaay
Paathaththir Kanniyaay Nilavinaip Pathiththaay – 2
Unniru Karangalil Ulakaththin Oliyaam – 2
Uththamar Yesu Paalanaik Konndaay
Un Thiruppaatham Thaetiyae Vanthom
Un Elil Kanndu Ullaththaith Thanthom – 2
Kannnnena Emmaik Kaaththarulvaayae – 2
Karththarin Thaayae Thunnai Entum Neeyae
Annaiyae Arokkiya Annaiyae - அன்னையே ஆரோக்கிய அன்னையே
Reviewed by Christking
on
July 24, 2020
Rating:
No comments: