Anbe Pirathanam Sagothara - அன்பே பிரதானம் சகோதர
- TAMIL
- ENGLISH
அன்பே பிரதானம் – சகோதர
அன்பே பிரதானம்
சரணங்கள்
1. பண்புறு ஞானம் – பரம நம்பிக்கை,
இன்ப விஸ்வாசம் – இவைகளிலெல்லாம்
— அன்பே
2. பலபல பாஷை – படித்தறிந்தாலும்,
கல கல வென்னும் – கைம்மணியாமே
— அன்பே
3. என் பொருள் யாவும் – ஈந்தளித்தாலும்,
அன்பிலையானால் – அதிற்பயனில்லை
— அன்பே
4. துணிவுடனுடலைச் – சுடக்கொடுத்தாலும்,
பணிய அன்பில்லால் – பயனதில்லை
— அன்பே
5. சாந்தமும் தயவும் – சகல நற்குணமும்,
போந்த சத்தியமும் – பொறுமையுமுள்ள
— அன்பே
6. புகழிறு மாப்பு – பொழிவு பொறாமை,
பகைய நியாயப் – பாவமுஞ் செய்யா
— அன்பே
7. சினமடையாது – தீங்கு முன்னாது,
தினமழியாது – தீமை செய்யாது
— அன்பே
8. சகலமுந் தாங்கும் – சகலமும் நம்பும்,
மிகைபட வென்றும் – மேன்மை பெற்றோங்கும்
— அன்பே
Anpae Pirathaanam – Sakothara
Anpae Pirathaanam
Saranangal
1. Pannputru Njaanam – Parama Nampikkai,
Inpa Visvaasam – Ivaikalilellaam
— Anpae
2. Palapala Paashai – Patiththarinthaalum,
Kala Kala Vennum – Kaimmanniyaamae
— Anpae
3. En Porul Yaavum – Eenthaliththaalum,
Anpilaiyaanaal – Athirpayanillai
— Anpae
4. Thunnivudanudalaich – Sudakkoduththaalum,
Panniya Anpillaal – Payanathillai
— Anpae
5. Saanthamum Thayavum – Sakala Narkunamum,
Pontha Saththiyamum – Porumaiyumulla
— Anpae
6. Pukalitru Maappu – Polivu Poraamai,
Pakaiya Niyaayap – Paavamunj Seyyaa
— Anpae
7. Sinamataiyaathu – Theengu Munnaathu,
Thinamaliyaathu – Theemai Seyyaathu
— Anpae
8. Sakalamun Thaangum – Sakalamum Nampum,
Mikaipada Ventum – Maenmai Pettangum
— Anpae
Anbe Pirathanam Sagothara - அன்பே பிரதானம் சகோதர
Reviewed by Christking
on
July 24, 2020
Rating:
No comments: