Alaikkiraar Alaikkiraar Itho - அழைக்கிறார் அழைக்கிறார் இதோ - Christking - Lyrics

Alaikkiraar Alaikkiraar Itho - அழைக்கிறார் அழைக்கிறார் இதோ


அழைக்கிறார் அழைக்கிறார் இதோ
நீயும் வா உந்தன் நேசர்
ஆவலாய் அழைக்கிறார் – இதோ

1. பாவத்தை ஏற்றவர் பலியாய் மாண்டவர்
கல்வாரியின் மேட்டினில் கண்கொள்ளாத காட்சியே
கண்டிடும் , வேண்டிடும் பாவப்பாரம் நீங்கிடும்
— அழைக்கிறார்

2. நோயையும் ஏற்றவர் பேயையும் வென்றவர்
நேசர் உந்தன் நோய்களை நிச்சயமாய் தீர்த்தாரே
நோயுற்ற உன்னையே நேயமாய் அழைக்கிறார்
— அழைக்கிறார்

3. துன்பம் சகித்தவர் , துயரடைந்தவர்
இன்னலுற்ற உன்னையே அண்ணல் யேசழைக்கிறார்
துன்புறும் நெஞ்சமே துரிதமாக வாராயோ
— அழைக்கிறார்

4. அந்தக் கேடடைந்தார் அழகற்றுத் தோன்றினார்
சொந்தமாகச் சேர்ந்திட இந்தப் பாடடைந்தாரே
நிந்திக்கும் உன்னையும் சந்திப்பார் நீ வாராயோ
— அழைக்கிறார்

5. கல்லறைத் திறக்கக் காவலர் நடுங்கக்
கஸ்திகளடைந்தாரே கட்டுகளறுத்தாரே
உயிர்த்தார் , ஜெயித்தார் உண்டு மீட்புனக்குமே
— அழைக்கிறார்

6. சாந்த சொரூபனே ! சத்திய வாசனே !
வஞ்சமற்ற வாயனே வந்தணைக்கும் நேயனே
தஞ்சமே தன்னையே தந்துனை அழைக்கிறார்
— அழைக்கிறார்


Alaikkiraar Alaikkiraar Itho
Neeyum Vaa Unthan Naesar
Aavalaay Alaikkiraar – Itho

1. Paavaththai Aettavar Paliyaay Maanndavar
Kalvaariyin Maettinil Kannkollaatha Kaatchiyae
Kanndidum , Vaenndidum Paavappaaram Neengidum
— Alaikkiraar

2. Nnoyaiyum Aettavar Paeyaiyum Ventavar
Naesar Unthan Nnoykalai Nichchayamaay Theerththaarae
Nnoyutta Unnaiyae Naeyamaay Alaikkiraar
— Alaikkiraar

3. Thunpam Sakiththavar , Thuyaratainthavar
Innalutta Unnaiyae Annnal Yaesalaikkiraar
Thunpurum Nenjamae Thurithamaaka Vaaraayo
— Alaikkiraar

4. Anthak Kaedatainthaar Alakattuth Thontinaar
Sonthamaakach Sernthida Inthap Paadatainthaarae
Ninthikkum Unnaiyum Santhippaar Nee Vaaraayo
— Alaikkiraar

5. Kallaraith Thirakkak Kaavalar Nadungak
Kasthikalatainthaarae Kattukalaruththaarae
Uyirththaar , Jeyiththaar Unndu Meetpunakkumae
— Alaikkiraar

6. Saantha Soroopanae ! Saththiya Vaasanae !
Vanjamatta Vaayanae Vanthannaikkum Naeyanae
Thanjamae Thannaiyae Thanthunai Alaikkiraar
— Alaikkiraar

Alaikkiraar Alaikkiraar Itho - அழைக்கிறார் அழைக்கிறார் இதோ Alaikkiraar Alaikkiraar Itho - அழைக்கிறார் அழைக்கிறார் இதோ Reviewed by Christking on July 23, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.