Aiyaiyaa Naan Oru Maapaavi - ஐயையா நான் ஒரு மாபாவி
- TAMIL
- ENGLISH
ஐயையா, நான் ஒரு மாபாவி – என்னை ஆண்டு நடத்துவீர், தேவாவி!
1. மெய் ஐயா, இது தருணம், ஐயா – என்றன்
மீதிலிரங்கச் சமயம் ஐயா
ஐயையா, இப்போ தென்மேல் இரங்கி – வெகு
அவசியம் வரவேணும், தேவாவி! — ஐயையா
2. எனதிருதயம் பாழ்நிலமாம் – ஏழை
என்னைத் திருத்தி நீர் அன்பாகத்
தினமும் வந்து வழி நடத்தும் – ஞான
தீபமே, உன்னத தேவாவி! — ஐயையா
3. ஆகாத லோகத்தின் வாழ்வை எல்லாம் – தினம்
அருவருத்து நான் தள்ளுதற்கு
வாகன சத்த மனம் தருவீர் – நீர்
வல்லவராகிய தேவாவி! — ஐயையா
4. பத்தியின் பாதை விலகாமல் – கெட்ட
பாவத்தில் ஆசைகள் வையாமல்
சத்திய வேதப்படி நடக்க – என்னைத்
தாங்கி நடத்திடும், தேவாவி! — ஐயையா
5. அன்பு, பொறுமை, நற்சந்தோஷம் – என்
ஆண்டவரின் மேல் விசுவாசம்,
இன்பமிகு மெய்ச் சமாதானம் – இவை
யாவும் தருவீரே, தேவாவி! — ஐயையா
6. ஏசுகிறிஸ்துவில் நான் சார்ந்து – அவர்
இடத்திலேயே நம்பிக்கை வைக்க,
மாசில்லாத் துய்யனே, வந்துதவும் – நீர்
வராமல் தீராதே, தேவாவி! — ஐயையா
Aiyaiyaa, Naan Oru Maapaavi – Ennai
Aanndu Nadaththuveer, Thaevaavi!
1. Mey Aiyaa, Ithu Tharunam, Aiyaa – Entan
Meethilirangach Samayam Aiyaa
Aiyaiyaa, Ippo Thenmael Irangi – Veku
Avasiyam Varavaenum, Thaevaavi! — Aiyaiyaa
2. Enathiruthayam Paalnilamaam – Aelai
Ennaith Thiruththi Neer Anpaakath
Thinamum Vanthu Vali Nadaththum – Njaana
Theepamae, Unnatha Thaevaavi! — Aiyaiyaa
3. Aakaatha Lokaththin Vaalvai Ellaam – Thinam
Aruvaruththu Naan Thallutharku
Vaakana Saththa Manam Tharuveer – Neer
Vallavaraakiya Thaevaavi! — Aiyaiyaa
4. Paththiyin Paathai Vilakaamal – Ketta
Paavaththil Aasaikal Vaiyaamal
Saththiya Vaethappati Nadakka – Ennaith
Thaangi Nadaththidum, Thaevaavi! — Aiyaiyaa
5. Anpu, Porumai, Narsanthosham – en
Aanndavarin Mael Visuvaasam,
Inpamiku Meych Samaathaanam – Ivai
Yaavum Tharuveerae, Thaevaavi! — Aiyaiyaa
6. Aesukiristhuvil Naan Saarnthu – Avar
Idaththilaeyae Nampikkai Vaikka,
Maasillaath Thuyyanae, Vanthuthavum – Neer
Varaamal Theeraathae, Thaevaavi! — Aiyaiyaa
Aiyaiyaa Naan Oru Maapaavi - ஐயையா நான் ஒரு மாபாவி
Reviewed by Christking
on
July 23, 2020
Rating:
No comments: