Aettukkonndarulumae Thaevaa! - ஏற்றுக்கொண்டருளுமே தேவா! - Christking - Lyrics

Aettukkonndarulumae Thaevaa! - ஏற்றுக்கொண்டருளுமே தேவா!


ஏற்றுக்கொண்டருளுமே, தேவா! – இப்போ
தேழையேன் ஜெபத்தை இயேசுவின் மூலம்

1. சாற்றின ஆதி ஆயத்த ஜெபமும்,
சாந்தமாய் ஜெபித்த பாவ அறிக்கையும்,
தேற்றிக் கொண்டருளும் மன்னிப்பின் மருவும்
திவ்விய பாதத்தில் வைக்கிறேன், ஸ்வாமி — ஏற்று

2. குறைவுண்டு இதிலே, அருமைப் பிதாவே
குற்றம் மன்னித்திடும் யேசுவின் மூலம்;
முறைப்படி கேட்க நான் தெரியாத பாவி;
முழுதும் மேசியாமேல் வைக்கிறேன், ஸ்வாமி — ஏற்று

3. மறுரூப ஆவி வேண்டுமென் ஸ்வாமி;
மனமெல்லாம் புதிதாக்கிடும் ஸ்வாமி,
சிறுமைப்பட் டடியேன், கேட்கிறேன் ஸ்வாமி
தேற்றிடும் புதுபலன் ஊற்றிடும் ஸ்வாமி — ஏற்று

4. விசுவாசம் பெருகி நிலைத்திடச் செய்யும்;
வெளிப்படும் மறைபொருள் பலப்படச் செய்யும்;
சிசுவைப்போல் மறுபடி பிறந்திடச் செய்யும்;
தேவாவி என்னுளந் தங்கிடச் செய்யும் — ஏற்று


Aettukkonndarulumae, Thaevaa! – Ippo
Thaelaiyaen Jepaththai Yesuvin Moolam

1. Saattina Aathi Aayaththa Jepamum,
Saanthamaay Jepiththa Paava Arikkaiyum,
Thaettik Konndarulum Mannippin Maruvum
Thivviya Paathaththil Vaikkiraen, Svaami — Aettu

2. Kuraivunndu Ithilae, Arumaip Pithaavae
Kuttam Manniththidum Yaesuvin Moolam;
Muraippati Kaetka Naan Theriyaatha Paavi;
Muluthum Maesiyaamael Vaikkiraen, Svaami — Aettu

3. Maruroopa Aavi Vaenndumen Svaami;
Manamellaam Puthithaakkidum Svaami,
Sirumaippat Datiyaen, Kaetkiraen Svaami
Thaettidum Puthupalan Oottidum Svaami — Aettu

4. Visuvaasam Peruki Nilaiththidach Seyyum;
Velippadum Maraiporul Palappadach Seyyum;
Sisuvaippol Marupati Piranthidach Seyyum;
Thaevaavi Ennulan Thangidach Seyyum — Aettu

Aettukkonndarulumae Thaevaa! - ஏற்றுக்கொண்டருளுமே தேவா! Aettukkonndarulumae Thaevaa! - ஏற்றுக்கொண்டருளுமே தேவா! Reviewed by Christking on July 23, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.