Aayiram Kaikal Uyarattum - ஆயிரம் கைகள் உயரட்டும்
- TAMIL
- ENGLISH
ஆயிரம் கைகள் உயரட்டும்
ஆண்டவர் பணியில் இணையட்டும்
தேசம் கர்த்தரை அறியட்டும்
இயேசுவின் மகிமை எங்கும் ஓங்கட்டும்
இந்தியர் மனங்களில் இயேசு என்றும் வாழட்டும்
இயேசுவின்நாமம் எங்கும் ஜெயமாகட்டும்
1.மேட்டிமை யாவும் ஒழியட்டும் – நம்
பேதங்கள் முழுவதும் மறையட்டும்
தாழ்வு மனங்கள் நீங்கட்டும்
தாழ்ந்த ஜனங்கள் உயரட்டும்
பகைமை யாவும் விலகட்டும்
பயங்கள் முழுவதும் சாகட்டும்
2.தங்கத்திருமனம் கொண்டவர் .. இத்
தரணியை மாற்றும் தூதுவர்
பணிவின் ஆவி பெற்றவர்
பரமனின் உள்ளம் கொண்டவர்
திருச்சபை வளர்ச்சி ஊழியர்
தேவனின் மகிமையைக் கூறட்டும்
3.மனித மலர்ச்சி துவங்கட்டும் – மன
பாலைவனங்கள் மாறட்டும்
பாவ உலகம் திருந்தட்டும்
கர்த்தரின் அரசு விடியட்டும்
அன்பு உருக்கம் நிலவட்டும்
ஆண்டவர் சித்தமே நடக்கட்டும்
4.தேசத்தின் எல்லைகளெங்கிலும் – நம்
தேவனின் வல்லமை விளங்கட்டும்
இந்திய மொழிகள் யாவுமே
இயேசுவை வாழ்த்திப்பாடட்டும்
ஜாதிகள் கூட்டம் கூட்டமாய்
ஆண்டவர் முன்னே பணியட்டும்
Aayiram Kaikal Uyarattum
Aanndavar Panniyil Innaiyattum
Thaesam Karththarai Ariyattum
Yesuvin Makimai Engum Ongattum
Inthiyar Manangalil Yesu Entum Vaalattum
Yesuvinnaamam Engum Jeyamaakattum
1.maettimai Yaavum Oliyattum – Nam
Paethangal Muluvathum Maraiyattum
Thaalvu Manangal Neengattum
Thaalntha Janangal Uyarattum
Pakaimai Yaavum Vilakattum
Payangal Muluvathum Saakattum
2.thangaththirumanam Konndavar .. Ith
Tharanniyai Maattum Thoothuvar
Pannivin Aavi Pettavar
Paramanin Ullam Konndavar
Thiruchchapai Valarchchi Ooliyar
Thaevanin Makimaiyaik Koorattum
3.manitha Malarchchi Thuvangattum – Mana
Paalaivanangal Maarattum
Paava Ulakam Thirunthattum
Karththarin Arasu Vitiyattum
Anpu Urukkam Nilavattum
Aanndavar Siththamae Nadakkattum
4.thaesaththin Ellaikalengilum – Nam
Thaevanin Vallamai Vilangattum
Inthiya Molikal Yaavumae
Yesuvai Vaalththippaadattum
Jaathikal Koottam Koottamaay
Aanndavar Munnae Panniyattum
Aayiram Kaikal Uyarattum - ஆயிரம் கைகள் உயரட்டும்
Reviewed by Christking
on
July 22, 2020
Rating:
No comments: