Aathiyil Yethenil Aadhamu - ஆதியில் ஏதேனில் ஆதாமுக் - Christking - Lyrics

Aathiyil Yethenil Aadhamu - ஆதியில் ஏதேனில் ஆதாமுக்


ஆதியில் ஏதேனில் ஆதாமுக் கேவாளை
அருளிச் செய்தீரே
அவ்விதமாகவே இவ்விரு பேரையும்
இணைத்தருள்வீரே

மங்களமாய் திருமறையைத் தொடங்கி
மங்களாமாய் முடித்தீர்
மங்கள மா மணவாளனாய்
மைந்தரை மாநிலத்தில் விடுத்தீர்

ஆபிரகாம் எலியேசர் தம்
மன்றாட்டுக் கருள் புரிந்தீரே
அங்ங்னமே இந்த மங்களம்
செழிக்க ஆசியருள்வீரே

கானாவூர் கலியாணம் கண்டு
களித்த எம் காத்தரே வந்திடுவீர்
காசினி மீதிவர் நேசமாய்
வாழ்ந்திட கிருபை செய்திடுவீர்

இன்பமும் துன்பமும் இம்மண
மக்கள் தாம் இசைந்து வாழ்ந்திடவே
அன்பர் உம் பாதம் ஆதாரம்
என்றும்மை அணுகச் செய்திடுவீர்


Aathiyil Aethaenil Aathaamuk Kaevaalai
Arulich Seytheerae
Avvithamaakavae Ivviru Paeraiyum
Innaiththarulveerae

Mangalamaay Thirumaraiyaith Thodangi
Mangalaamaay Mutiththeer
Mangala Maa Manavaalanaay
Maintharai Maanilaththil Viduththeer

Aapirakaam Eliyaesar Tham
Mantattuk Karul Purintheerae
Angngnamae Intha Mangalam
Selikka Aasiyarulveerae

Kaanaavoor Kaliyaanam Kanndu
Kaliththa Em Kaaththarae Vanthiduveer
Kaasini Meethivar Naesamaay
Vaalnthida Kirupai Seythiduveer

Inpamum Thunpamum Immana
Makkal Thaam Isainthu Vaalnthidavae
Anpar Um Paatham Aathaaram
Entummai Anukach Seythiduveer

Aathiyil Yethenil Aadhamu - ஆதியில் ஏதேனில் ஆதாமுக் Aathiyil Yethenil Aadhamu - ஆதியில் ஏதேனில் ஆதாமுக் Reviewed by Christking on July 21, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.