Aannikal Paayntha Karangalai - ஆணிகள் பாய்ந்த கரங்களை
- TAMIL
- ENGLISH
ஆணிகள் பாய்ந்த கரங்களை விரித்தே
ஆவலாய் இயெசுன்னை அழைக்கிறாரே
1. பார் ! திருமேனி வாரடியேற்றவர்
பாரச் சிலுவைதனைச் சுமந்து சென்றனரே
பாவமும் சாபமும் சுமந்தாரே உனக்காய்
பயமின்றி வந்திடுவாய் — ஆணிகள்
2. மயக்கிடுமோ இன்னும் மாயையின் இன்பம்
நயத்தாலே உந்தனை நாசமாக்கிடுமே
உணர்ந்திதையுடனே உன்னதனண்டை
சரண்புகுவாய் இத்தருணம் — ஆணிகள்
3. கிருபையின் வாசல் அடைத்திடு முன்னே
மரணத்தின் சாயலில் இணைந்திடுவாயே
உருவாக்கியே புது சிருஷ்டியில் வளர
கிருபையும் அளித்திடுவார் — ஆணிகள்
4. பரிசுத்த ஆவியால் பரமனின் அன்பினைப்
பகர்ந்திடுவார் உந்தன் இருதயந்தனிலே
மறுரூப நாளின் அச்சாரமதுவே
மகிமையும் அடைந்திடுவாய் — ஆணிகள்
5. இயேசுவல்லாது இரட்சிப்புத் தருவோர்
இரட்சகர் வேறு இகமதிலுண்டோ
அவர் வழி சத்தியம் ஜீவனுமாமே
அவரே உன் நாயகரே — ஆணிகள்
Aannikal Paayntha Karangalai Viriththae
Aavalaay Iyesunnai Alaikkiraarae
1. Paar ! Thirumaeni Vaaratiyaettavar
Paarach Siluvaithanaich Sumanthu Sentanarae
Paavamum Saapamum Sumanthaarae Unakkaay
Payaminti Vanthiduvaay — Aannikal
2. Mayakkidumo Innum Maayaiyin Inpam
Nayaththaalae Unthanai Naasamaakkidumae
Unarnthithaiyudanae Unnathananntai
Sarannpukuvaay Iththarunam — Aannikal
3. Kirupaiyin Vaasal Ataiththidu Munnae
Maranaththin Saayalil Innainthiduvaayae
Uruvaakkiyae Puthu Sirushtiyil Valara
Kirupaiyum Aliththiduvaar — Aannikal
4. Parisuththa Aaviyaal Paramanin Anpinaip
Pakarnthiduvaar Unthan Iruthayanthanilae
Maruroopa Naalin Achcharamathuvae
Makimaiyum Atainthiduvaay — Aannikal
5. Yesuvallaathu Iratchipputh Tharuvor
Iratchakar Vaetru Ikamathilunntoo
Avar Vali Saththiyam Jeevanumaamae
Avarae Un Naayakarae — Aannikal
Aannikal Paayntha Karangalai - ஆணிகள் பாய்ந்த கரங்களை
Reviewed by Christking
on
July 05, 2020
Rating: