Aanduku Oru Murai Varugirathu - ஆண்டுக்கு ஒருமுறை வருகிறது - Christking - Lyrics

Aanduku Oru Murai Varugirathu - ஆண்டுக்கு ஒருமுறை வருகிறது


ஆண்டுக்கு ஒருமுறை வருகிறது திருவருகைக்காலம்
மனதினில் சந்தோசம் பொங்கிடுது இறைப்பிறப்பின் காலம்
அந்த தேவன் வருகையில் இந்த பூமி மகிழுது
ஒளிதீபம் இதயத்தில் தேவ கானம் கேட்குது வருகையின் காலமிது

தலைமகன் இயேசு பிறந்திடும் காலம்
இதயத்தை நாமும் அலங்கரிப்போம்
மேடும் பள்ளமும் நிறைந்த நம் வாழ்வில்
சமன் செய்ய இன்றே முயன்றிடுவோம்
கல்லும் முள்ளும் நிறையும் பாதையில் சுவடு இல்லை
இரவும் பகலும் உழைக்கும் வாழ்வில் இனிமை இல்லை
தீமைகள் களைந்து நன்மைகள் விதைப்போம்
பிறப்பைக் காணுவோம்

ஒரு பெண்டிர் குடும்பத்தில் பிறக்கின்றபோது
எத்தனை எத்தனை எதிர்பார்ப்பு
தாயும் சேயும் நலமாய் வாழ வகைவகையான உபசரிப்பு
மாடுகள் அடையும் தொழுவம் மன்னன் பிறப்பும் அரண்மனை
எதிர்பார்ப்புகள் இல்லா ஏழை அண்ணலின் அன்பு உறவுகள்
உள்ளத்தில் குழந்தை உபசரித்திடுவோம் போற்றியே வாழ்த்துவோம்


Aanndukku Orumurai Varukirathu Thiruvarukaikkaalam
Manathinil Santhosam Pongiduthu Iraippirappin Kaalam
Antha Thaevan Varukaiyil Intha Poomi Makiluthu
Olitheepam Ithayaththil Thaeva Kaanam Kaetkuthu Varukaiyin Kaalamithu

Thalaimakan Yesu Piranthidum Kaalam
Ithayaththai Naamum Alangarippom
Maedum Pallamum Niraintha Nam Vaalvil
Saman Seyya Inte Muyantiduvom
Kallum Mullum Niraiyum Paathaiyil Suvadu Illai
Iravum Pakalum Ulaikkum Vaalvil Inimai Illai
Theemaikal Kalainthu Nanmaikal Vithaippom
Pirappaik Kaanuvom

Oru Penntir Kudumpaththil Pirakkintapothu
Eththanai Eththanai Ethirpaarppu
Thaayum Seyum Nalamaay Vaala Vakaivakaiyaana Upasarippu
Maadukal Ataiyum Tholuvam Mannan Pirappum Arannmanai
Ethirpaarppukal Illaa Aelai Annnalin Anpu Uravukal
Ullaththil Kulanthai Upasariththiduvom Pottiyae Vaalththuvom

Aanduku Oru Murai Varugirathu - ஆண்டுக்கு ஒருமுறை வருகிறது Aanduku Oru Murai Varugirathu - ஆண்டுக்கு ஒருமுறை வருகிறது Reviewed by Christking on July 05, 2020 Rating: 5
Powered by Blogger.