Aandavare Um Paatham - ஆண்டவரே உம் பாதம் - Christking - Lyrics

Aandavare Um Paatham - ஆண்டவரே உம் பாதம்


ஆண்டவரே உம் பாதம் சரணடைந்தேன்
அடிமை நான் ஐயா
ஆயிரம் ஆயிரம் துன்பங்கள் வந்தாலும்
அகன்று போக மாட்டேன் – உம்மை விட்டு
அகன்று போக மாட்டேன்

ஒவ்வொரு நாளும் உம் குரல் கேட்டு
அதன்படி நடக்கின்றேன்
உலகினை மறந்து உம்மையே நோக்கி
ஓடி வருகின்றேன்

வாலிபன் தனது வழிதனையே
எதனால் சுத்தம் பண்ணுவான்
தேவனே உமது வார்த்தையின்படியே
காத்துக் கொள்வதனால்

வேதத்திலுள்ள அதிசயம் அனைத்தும்
நன்கு புரியும்படி
தேவனே எனது கண்களையே
தினமும் திறந்தருளும்

நான் நடப்பதற்கு பாதையைக் காட்டும்
தீபமே உம் வசனம்
செல்லும் வழிக்கும் வெளிச்சமும் அதுவே
தேவனே உம் வாக்கு

தேவனே உமக்கு எதிராய் நான்
பாவம் செய்யாதபடி
உமது வாக்வை என் இருதயத்தில்
பதித்து வைத்துள்ளேன்


Aanndavarae Um Paatham Saranatainthaen
Atimai Naan Aiyaa
Aayiram Aayiram Thunpangal Vanthaalum
Akantu Poka Maattaen – Ummai Vittu
Akantu Poka Maattaen

Ovvoru Naalum Um Kural Kaettu
Athanpati Nadakkinten
Ulakinai Maranthu Ummaiyae Nnokki
Oti Varukinten

Vaalipan Thanathu Valithanaiyae
Ethanaal Suththam Pannnuvaan
Thaevanae Umathu Vaarththaiyinpatiyae
Kaaththuk Kolvathanaal

Vaethaththilulla Athisayam Anaiththum
Nanku Puriyumpati
Thaevanae Enathu Kannkalaiyae
Thinamum Thirantharulum

Naan Nadappatharku Paathaiyaik Kaattum
Theepamae Um Vasanam
Sellum Valikkum Velichchamum Athuvae
Thaevanae Um Vaakku

Thaevanae Umakku Ethiraay Naan
Paavam Seyyaathapati
Umathu Vaakvai en Iruthayaththil
Pathiththu Vaiththullaen

Aandavare Um Paatham - ஆண்டவரே உம் பாதம் Aandavare Um Paatham - ஆண்டவரே உம் பாதம் Reviewed by Christking on July 05, 2020 Rating: 5
Powered by Blogger.