Aandavane Kirubai Kooraai - ஆண்டவனே கிருபை கூராய்
- TAMIL
- ENGLISH
ஆண்டவனே கிருபை கூராய் எனக்
காதாரம் உன்றனின் பாதாரவிந்தம்
மீண்டெனின்மேல் தயை பூண்டருள் நாதா
ஈண்டுனின் தாள்பணிந்தேன் திருப்பாதா
துர்க்குணத்தி லுருவானேன் பொல்லாத்
தோஷியாய்ப் பேயவன் தோழனாய்ப் போனேன்
நற்குண மென்னில்நான் காணேன் – நித்ய
நாச மரண நரகுக்குள்ளானேன்
சற்குண மன்பு தயைமிகு தேவா
தாவிப் பிடித்தேனான் மேவிநீ காவா
பாவ ஊற்றெனதுள்ளம் மெய்யே பாவம்
பாய்வழி யென்செவி வாய் கண் கால் கையே
நோவென்னைப் பிசித்ததென் ஐயே – எனை
நோக்கி யுலகுசொல்லும் ஆறுதல் பொய்யே
ஏவை புத்திரனழு தேங்கல் நோக்காயோ
என் பாவச்சேற்றை விட்டென்னைத் தூக்காயோ
சாபத்துக்களாய்ப் போனேன் சீனாய்த்
தன்னிடி குமுறலின் சத்தங்கேட்டேனே
கோபத்தின் தீயைக்கண்டேனே – தேவ
கோஷ்ட முணர்ந்தே கலக்கமுற்றேனே
ஆபத்தில் நீ என் அடைக்கலம் தஞ்சம்
ஐயையோ எங்கோடும் என் ஏழைநெஞ்சம்
பாடெனக்காய்ப் பட்டாயன்றோ என்றன்
பத்தாநின்சாவு நான் சாவதற்கென்றோ
கேடென்னில் நிற்பதும் நன்றோ – என்னைக்
கேளாதிருக்க உன்றன் மனங்குன்றோ
நாடறியப் பாடு பட்டுயிர் தந்தாய்
நம்பினபேர்க்கா யுயிர்தங்கு சென்றாய்
Aanndavanae Kirupai Kooraay Enak
Kaathaaram Untanin Paathaaravintham
Meenndeninmael Thayai Poonndarul Naathaa
Eenndunin Thaalpanninthaen Thiruppaathaa
Thurkkunaththi Luruvaanaen Pollaath
Thoshiyaayp Paeyavan Tholanaayp Ponaen
Narkuna Mennilnaan Kaanneen – Nithya
Naasa Marana Narakukkullaanaen
Sarkuna Manpu Thayaimiku Thaevaa
Thaavip Pitiththaenaan Maevinee Kaavaa
Paava Oottenathullam Meyyae Paavam
Paayvali Yensevi Vaay Kann Kaal Kaiyae
Nnovennaip Pisiththathen Aiyae – Enai
Nnokki Yulakusollum Aaruthal Poyyae
Aevai Puththiranalu Thaengal Nnokkaayo
En Paavachchatta Vittennaith Thookkaayo
Saapaththukkalaayp Ponaen Seenaayth
Thanniti Kumuralin Saththangaettaenae
Kopaththin Theeyaikkanntaenae – Thaeva
Koshda Munarnthae Kalakkamuttenae
Aapaththil Nee en Ataikkalam Thanjam
Aiyaiyo Engadum en Aelainenjam
Paadenakkaayp Pattayanto Entan
Paththaaninsaavu Naan Saavatharkento
Kaedennil Nirpathum Nanto – Ennaik
Kaelaathirukka Untan Manangunto
Naadariyap Paadu Pattuyir Thanthaay
Nampinapaerkkaa Yuyirthangu Sentay
Aandavane Kirubai Kooraai - ஆண்டவனே கிருபை கூராய்
Reviewed by Christking
on
July 05, 2020
Rating: