Aandava Vaa Melogil Um - ஆண்டவா மேலோகில் உம் - Christking - Lyrics

Aandava Vaa Melogil Um - ஆண்டவா மேலோகில் உம்


1. ஆண்டவா! மேலோகில் உம்
அன்பின் ஜோதி ஸ்தலமும்
பூவில் ஆலயமுமே
பக்தர்க்கு மா இன்பமே
தாசர் சபை சேர்ந்திட
நிறைவாம் அருள் பெற
ஜோதி காட்சி காணவும்
ஏங்கி உள்ளம் வாஞ்சிக்கும்.

2. பட்சிகள் உம் பீடமே
சுற்றித் தங்கி பாடுமே
பாடுவாரே பக்தரும்
திவ்விய மார்பில் தங்கியும்
புறாதான் பேழை நீங்கியே
மீண்டும் வந்தாற்போலவே
ஆற்றில் காணா நின் பக்தர்
ஆறிப்பாதம் தரிப்பர்.

3. அழுகையின் பள்ளத்தில்
ஆர்ப்பரிப்பார் உள்ளத்தில்
ஜீவ ஊற்றுப்பொங்கிடும்
மன்னா நித்தம் பெய்திடும்
பலம் நித்தம் ஓங்கியே
உந்தன் பாதம் சேரவே
துதிப்பார் சாஷ்டாங்கமாய்
ஜீவ கால அன்புக்காய்.

4. பெற மோட்ச பாக்கியம்
பூவில் வேண்டும் சமுகம்
ரட்சை செய்யும் தயவால்
பாதம் சேர்த்தருள்வதால்
நீரே சூரியன் கேடகம்
வழித்துணை காவலும்
கிருபை மகிமையும்
மேலும் மேலும் பொழியும்.


1. Aanndavaa! Maelokil Um
Anpin Jothi Sthalamum
Poovil Aalayamumae
Paktharkku Maa Inpamae
Thaasar Sapai Sernthida
Niraivaam Arul Pera
Jothi Kaatchi Kaanavum
Aengi Ullam Vaanjikkum.

2. Patchikal Um Peedamae
Suttith Thangi Paadumae
Paaduvaarae Paktharum
Thivviya Maarpil Thangiyum
Puraathaan Paelai Neengiyae
Meenndum Vanthaarpolavae
Aattil Kaannaa Nin Pakthar
Aarippaatham Tharippar.

3. Alukaiyin Pallaththil
Aarpparippaar Ullaththil
Jeeva Oottuppongidum
Mannaa Niththam Peythidum
Palam Niththam Ongiyae
Unthan Paatham Seravae
Thuthippaar Saashdaangamaay
Jeeva Kaala Anpukkaay.

4. Pera Motcha Paakkiyam
Poovil Vaenndum Samukam
Ratcha Seyyum Thayavaal
Paatham Serththarulvathaal
Neerae Sooriyan Kaedakam
Valiththunnai Kaavalum
Kirupai Makimaiyum
Maelum Maelum Poliyum.

Aandava Vaa Melogil Um - ஆண்டவா மேலோகில் உம்  Aandava Vaa Melogil Um - ஆண்டவா மேலோகில் உம் Reviewed by Christking on July 05, 2020 Rating: 5
Powered by Blogger.