Aananthamae ! Jeyaa ! Jeyaa ! - ஆனந்தமே ! ஜெயா ! ஜெயா ! - Christking - Lyrics

Aananthamae ! Jeyaa ! Jeyaa ! - ஆனந்தமே ! ஜெயா ! ஜெயா !


ஆனந்தமே ! ஜெயா ! ஜெயா !
அகமகிழ்ந்தனைவரும் பாடிடுவோம்

ஞானரட்சகர் நாதர் நமை -இந்த
நாள்வரை ஞாலமதினில் காத்தார் — புகழ்

1. சங்கு கனம் , வளர் செங்கோலரசிவை
தளராதுள கிறிஸ்தானவராம்
எங்கள் ரட்சகரேசு நமை -வெகு
இரக்கங் கிருபையுடன் ரட்சித்ததால் — புகழ்

2. முந்து வருடமதனில் மனுடரில் வெகு
மோசகஸ்திகள் தனிலேயுழல
தந்து நமக்குயிருடையுணவும் – வெகு
தயவுடன் யேசு தற்காத்ததினால் — புகழ்

3. பஞ்சம்பசிக்கும் பட்டயத்துக்கும் வெகுகொடும்
பாழ் கொள்ளைநோய் விஷதோஷத்திற்கும்
தஞ்சரட்சகர் தவிர்த்து நமை -இத்
தரைதனில் குறைதணித் தாற்றியதால் — புகழ்


Aananthamae ! Jeyaa ! Jeyaa !
Akamakilnthanaivarum Paadiduvom

Njaanaratchakar Naathar Namai -intha
Naalvarai Njaalamathinil Kaaththaar — Pukal
1. Sangu Kanam , Valar Sengalarasivai
Thalaraathula Kiristhaanavaraam
Engal Ratchakaraesu Namai -veku
Irakkang Kirupaiyudan Ratchiththathaal — Pukal

2. Munthu Varudamathanil Manudaril Veku
Mosakasthikal Thanilaeyulala
Thanthu Namakkuyirutaiyunavum – Veku
Thayavudan Yaesu Tharkaaththathinaal — Pukal

3. Panjampasikkum Pattayaththukkum Vekukodum
Paal Kollainnoy Vishathoshaththirkum
Thanjaratchakar Thavirththu Namai -ith
Tharaithanil Kuraithannith Thaattiyathaal — Pukal

Aananthamae ! Jeyaa ! Jeyaa ! - ஆனந்தமே ! ஜெயா ! ஜெயா !  Aananthamae ! Jeyaa ! Jeyaa ! - ஆனந்தமே ! ஜெயா ! ஜெயா ! Reviewed by Christking on July 05, 2020 Rating: 5
Powered by Blogger.