Aa Sagotharar Ondrai Yegamaana - ஆ சகோதரர் ஒன்றாய் - Christking - Lyrics

Aa Sagotharar Ondrai Yegamaana - ஆ சகோதரர் ஒன்றாய்


1. ஆ, சகோதரர் ஒன்றாய்
ஏகமான சிந்தையாய்
சஞ்சரித்தல், எத்தனை
நேர்த்தியான இனிமை.

2. அது ஆரோன் சிரசில்
வார்த்துக் கீழ்வடிகையில்,
கந்தம் வீசும் எண்ணெயே,
போன்றதாயிருக்குமே.

3. அது எர்மோன்மேலேயும்
சீயோன் மேடுகளிலும்
பெய்கிற ஆகாசத்து
நற்பனியைப்போன்றது.

4. அங்கேதான் தயாபரர்
ஆசீர்வாதம் தருவார்,
அங்கிப்போதும் என்றைக்கும்
வாழ்வுண்டாகிப் பெருகும்.

5. மேய்ப்பரே, நீர் கிருபை
செய்து, சிதறுண்டதை
மந்தையாக்கி, யாவையும்
சேர்த்தணைத்துக்கொள்ளவும்.

6. எங்கள் நெஞ்சில் சகல
நற்குணங்களும் வர,
தெய்வ அன்பை அதிலே
ஊற்றும், இயேசு கிறிஸ்துவே.

7. நீரே நெஞ்சை நெஞ்சுடன்
கட்டி, நேசத்தின் பலன்
நன்மை தீமை நாளிலும்
காணக் கட்டளையிடும்.

8. மூன்றொன்றாகிய பிதா
மைந்தன் ஆவியும் எல்லா
நாளும் ஒருமைப்படும்
போல் இம்மந்தை ஒன்றவும்.


1. Aa, Sakotharar Ontay
Aekamaana Sinthaiyaay
Sanjariththal, Eththanai
Naerththiyaana Inimai.

2. Athu Aaron Sirasil
Vaarththuk Geelvatikaiyil,
Kantham Veesum Ennnneyae,
Pontathaayirukkumae.

3. Athu Ermonmaelaeyum
Seeyon Maedukalilum
Peykira Aakaasaththu
Narpaniyaippontathu.

4. Angaethaan Thayaaparar
Aaseervaatham Tharuvaar,
Angippothum Entaikkum
Vaalvunndaakip Perukum.

5. Maeypparae, Neer Kirupai
Seythu, Sitharunndathai
Manthaiyaakki, Yaavaiyum
Serththannaiththukkollavum.

6. Engal Nenjil Sakala
Narkunangalum Vara,
Theyva Anpai Athilae
Oottum, Yesu Kiristhuvae.

7. Neerae Nenjai Nenjudan
Katti, Naesaththin Palan
Nanmai Theemai Naalilum
Kaanak Kattalaiyidum.

8. Moontantakiya Pithaa
Mainthan Aaviyum Ellaa
Naalum Orumaippadum
Pol Immanthai Ontavum.

Aa Sagotharar Ondrai Yegamaana - ஆ சகோதரர் ஒன்றாய் Aa Sagotharar Ondrai Yegamaana - ஆ சகோதரர் ஒன்றாய் Reviewed by Christking on July 01, 2020 Rating: 5
Powered by Blogger.