Unthan Muham - உந்தன் முகம் | Rev.Lendsey Jones
Song: | Unthan Muham |
Album: | Christ Minded |
Lyrics & Tune: | Rev. Lendsey Jones |
Music: | Alwyn |
Sung by: | Rev. Lendsey Jones |
- Tamil Lyrics
- English Lyrics
உந்தன் முகம் பார்த்தேன்
எந்தன் அகம் மறந்தேன்
வாழ்வின் சுகம் துறந்தேன்
உந்தன் நுகம் சுமந்தேன்
வாழ்வேன் உமக்காகவே
உயிர் வாழும் நாட்களெல்லாம்
செய்வேன் உம் சித்தமே
என் ஜீவ காலமெல்லாம்
உருத்தெரியாமல் மங்கிடும் நேரம்
உம் முகம் காட்டி
உம்மை போல் மாற்றி
உமதன்பை ஊற்றி
உரிமை சொத்தாக்கி
உன் மனம் தந்தீரே
வழியறியாமல் திகைத்திடும் நேரம்
உம் ஒளி காட்டி
இருளை நீக்கி
நேர்வழியாக்கி, நடை ஸ்திரப்படுத்தி
உம் பாதை தந்தீரே
ஒன்றுமில்லாமல் உடைந்திட்ட நேரம்
உம் ஆவி ஊற்றி,
வெறுமையை மாற்றி
என் வாழ்வைத் தேற்றி
சகலமும் ஆற்றி
உம் முற்றும் தந்தீரே
English
Unthan Muham - உந்தன் முகம் | Rev.Lendsey Jones
Reviewed by Christking
on
June 30, 2020
Rating: