Kirubai Kirubai - கிருபை கிருபை | Pr. Reegan Gomez

Song: | Kirubai Kirubai |
Album: | Aarathanai Aaruthal Geethangal |
Lyrics & Tune: | Pr.Reegan Gomez |
Music: | Stephen Sanders |
Sung by: | Pr.Reegan Gomez |
- Tamil Lyrics
- English Lyrics
கிருபை கிருபை தேவ கிருபை
என்னை வாழ வைப்பதும் தேவ கிருபை
நான் என்று சொல்லிட
என்னில் என்ன மேன்மையுண்டு?
எல்லாம் கிருபை எல்லாம் கிருபை
எல்லாம் எல்லாம் கிருபை
1. நிர்மூலமாகாமல் காத்த கிருபை
என்னை இம்மட்டும் நடத்தின தேவகிருபை
2. பெலவீன சுகவீன நேரங்களில்
என்னை பெலத்தால் நிரப்பின தேவ கிருபை
3. அற்பனும் நீசனுமான என்னை
அபிஷேகம் செய்திட்ட தேவகிருபை
4. உன்னத ஊழியம் தந்த கிருபை
என்னை பயன்படுத்துவதும் தேவகிருபை
5. வழிகளில் என்னை காத்த கிருபை
என் வாழ்க்கையில் துணையாய் வந்த கிருபை
6. எனக்காய் யாவையும் செய்த கிருபை
என் தேவைகள் யாவையும் தந்த கிருபை
7. சிறுமையும் எளிமையுமான என்னை
கண்ணோக்கிப் பார்த்திட்ட தேவகிருபை
English
Kirubai Kirubai - கிருபை கிருபை | Pr. Reegan Gomez
Reviewed by Christking
on
June 22, 2020
Rating:
