Deva Kirubai Aasirvaatham - தேவ கிருபை ஆசீர்வாதம் - Christking - Lyrics

Deva Kirubai Aasirvaatham - தேவ கிருபை ஆசீர்வாதம்


தேவ கிருபை ஆசீர்வாதம்
தினமும் எங்களில் பெருகிட

சரணங்கள்

1. ஆவலாயும தோய்வு நாளில்
ஆலயந்தனில் பணிந்து புகழ
பாவ அறிக்கை செய்யும் ஜனங்கள்
பரனின் கிருபை பெற்று மகிழ — தேவ

2. ஆவலாய் எங்கள் ஆண் குழந்தைகள்
அழகான இள மரங்கள் போலவும்
பாவையர்களாம் பெண் குழந்தைகள்
பலத்த சித்திர அரண்கள் போலவும் — தேவ

3. எங்கள் பண்டக சாலை சகல
இன்ப வஸ்துக்கள் நிறைந்திருக்கவும்
பங்க வலசை பகலின் கூக்குரல்
பதியில் என்று மில்லாதிருக்கவும் — தேவ

4. எங்கள் மாடுகள் பலத்திருக்கவும்
இடுக்கணுள்ளே வராதிருக்கவும்
எங்கள் ஆடுகள் கிராமங்களிலே
லட்சங் கோடியாய்ப் பெருகி வரவும் — தேவ

5. ஆலயந்தனில் உமது வசனம்
அறிவிக்கும் போதக ரனைவருக்குள்ளும்
வேலை ஓய்ந்து பணியும் சபையார்
விரும்பிப் படிக்கும் சகலருக்குள்ளும் — தேவ

6. இத்தன்மையுடன் இருக்கும் ஜனங்கள்
இவர்கள் தாமென உலகம் சொல்லவும்
கர்த்தர் தெய்வமென் றிருக்கும் பாக்கியம்
கண்ட ஜனமென் றெம்மைச் சொல்லவும் — தேவ

7. உன்னதங்களின் இருக்கும் தெய்வத்தின்
உயர்ந்த நாமம் மகிமைப்படவும்
இந்நிலம் சமாதானம் பெற்றிட
இஷ்டம் மானிடர் மேலுண்டாகவும் — தேவ

8. இந்த வீட்டுக்குச் சமாதானம்
இன்ப சுகங்கள் அனைத்துண்டாகவும்
சந்ததியாய் நீடூழி வாழவும்
சபை யனைவரும் துதித்திப் பாடவும் — தேவ


Thaeva Kirupai Aaseervaatham
Thinamum Engalil Perukida

Saranangal

1. Aavalaayuma Thoyvu Naalil
Aalayanthanil Panninthu Pukala
Paava Arikkai Seyyum Janangal
Paranin Kirupai Pettu Makila — Thaeva

2. Aavalaay Engal Aann Kulanthaikal
Alakaana Ila Marangal Polavum
Paavaiyarkalaam Penn Kulanthaikal
Palaththa Siththira Arannkal Polavum — Thaeva

3. Engal Panndaka Saalai Sakala
Inpa Vasthukkal Nirainthirukkavum
Panga Valasai Pakalin Kookkural
Pathiyil Entu Millaathirukkavum — Thaeva

4. Engal Maadukal Palaththirukkavum
Idukkanullae Varaathirukkavum
Engal Aadukal Kiraamangalilae
Latchang Kotiyaayp Peruki Varavum — Thaeva

5. Aalayanthanil Umathu Vasanam
Arivikkum Pothaka Ranaivarukkullum
Vaelai Oynthu Panniyum Sapaiyaar
Virumpip Patikkum Sakalarukkullum — Thaeva

6. Iththanmaiyudan Irukkum Janangal
Ivarkal Thaamena Ulakam Sollavum
Karththar Theyvamen Rirukkum Paakkiyam
Kannda Janamen Raெmmaich Sollavum — Thaeva

7. Unnathangalin Irukkum Theyvaththin
Uyarntha Naamam Makimaippadavum
Innilam Samaathaanam Pettida
Ishdam Maanidar Maelunndaakavum — Thaeva

8. Intha Veettukkuch Samaathaanam
Inpa Sukangal Anaiththunndaakavum
Santhathiyaay Neetooli Vaalavum
Sapai Yanaivarum Thuthiththip Paadavum — Thaeva

Deva Kirubai Aasirvaatham - தேவ கிருபை ஆசீர்வாதம் Deva Kirubai Aasirvaatham - தேவ கிருபை ஆசீர்வாதம் Reviewed by Christking on June 27, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.