Deva Janame Paadi - தேவஜனமே பாடித் - Christking - Lyrics

Deva Janame Paadi - தேவஜனமே பாடித்


தேவஜனமே பாடித் துதிப்போம்
தேவ தேவனைப் போற்றிடுவோம்
துதிகள் என்றும் ஏற்றியே
அவரைப் பணிந்திடுவோம்

சென்ற நாளில் கண்ணின் மணிபோல்
காத்த தேவனைத் துதித்திடுவோம்
நீதி தயவு கிருபை நல்கும்
ஜீவதேவனைத் துதித்திடுவோம்

வானம் பூமி ஆளும் தேவன்
வாக்கை என்றுமே காத்திடுவார்
அவரின் உண்மை என்றும் நிலைக்கும்
மகிமை தேவனைத் துதித்திடுவோம்

கர்த்தர் நாமம் ஓங்கிப்படர
தேவமகிமை விளங்கிடவே
தேவசுதராய் சேவை செய்து
தேவராஜனை வாழ்த்திடுவோம்

தம்மை நோக்கி வேண்டும்போது
தாங்கி என்றுமே ஆதரிப்பார்
மறந்திடாமல் உறங்கிடாமல்
நினைத்த தேவனைத் துதித்திடுவோம்

நமது போரை தாமே முடித்து
ஜெயம் என்றும் அளித்திடுவார்
சேனை அதிபன் நமது தேவன்
அவரை என்றும் போற்றிடுவோம்


Devajanamae Paatith Thuthippom
Thaeva Thaevanaip Pottiduvom
Thuthikal Entum Aettiyae
Avaraip Panninthiduvom

Senta Naalil Kannnnin Mannipol
Kaaththa Thaevanaith Thuthiththiduvom
Neethi Thayavu Kirupai Nalkum
Jeevathaevanaith Thuthiththiduvom

Vaanam Poomi Aalum Thaevan
Vaakkai Entumae Kaaththiduvaar
Avarin Unnmai Entum Nilaikkum
Makimai Thaevanaith Thuthiththiduvom

Karththar Naamam Ongippadara
Thaevamakimai Vilangidavae
Thaevasutharaay Sevai Seythu
Thaevaraajanai Vaalththiduvom

Thammai Nnokki Vaenndumpothu
Thaangi Entumae Aatharippaar
Maranthidaamal Urangidaamal
Ninaiththa Thaevanaith Thuthiththiduvom

Namathu Porai Thaamae Mutiththu
Jeyam Entum Aliththiduvaar
Senai Athipan Namathu Thaevan
Avarai Entum Pottiduvom

Deva Janame Paadi - தேவஜனமே பாடித் Deva Janame Paadi - தேவஜனமே பாடித் Reviewed by Christking on June 27, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.