Deva Ivveetil Indre - தேவா இவ்வீட்டில் இன்றே
- TAMIL
- ENGLISH
தேவா இவ்வீட்டில் இன்றே மேவி எழுந்து வரவே – தயை
செய்வாய் எமது கோவா
மூவர் ஒருவரான தேவா கிறிஸ்துநாதா -எங்கள்
முன்னவா சத்ய வேதா
பூவில் எமக்குதவி யாருமில்லை எம் தாதா – யேசு
புண்ணியனே மா நீதா -இங்கு
நண்ணுவாய் மெய்ப் போதா – தயை
பண்ணுவாய் வினோதா
மேவி உனதருளை ஈவாய் இவ்வீட்டின் மீது
ஜீவனே யேசு கோனே – ஏழைப்
பாவிகள் மீட்பன் தானே
விந்தையுடன் களிப்பும் சந்தமுடன் உண்டாக – அதி
மேன்மையுடன் சிநேகம்
அந்தமுடன் பெருகி எந்தப் பாவமும் ஏக – என்றும்
அத்தனோ டுற வாக – ஜெப
துந்துமிகள் முழங்க – ஐக்யம்
பந்தமுடன் இலங்க,
தந்தைப் பரனே இன்று உன்றன் அருள் நிறைவாய்ச்
சொந்தமுடன் ஈவாயே – இவர்
சந்ததம் வாழ நீயே
இங்கு வசிக்கும் மட்டும் துங்கன் மொழிக் கிசைந்தே -பரன்
இஷ்டப்படி நடந்தே
அங்கம் மனது யாவும் பங்கம் இன்றித் தொடர்ந்தே -இவர்
அனுதினமும் மகிழ்ந்தே -உயர்
அம்பர வீட்டில் சேர்ந்து -மிகு
கெம்பீரமாக வாழ்ந்து
புங்கமுடன் நிதமும் தங்கி யேசு பரனில்
இங்கிதமாய்க் கொண்டாட -நிதம்
மங்களக் கவி பாட
Devaa Ivveettil Inte Maevi Elunthu Varavae – Thayai
Seyvaay Emathu Kovaa
Moovar Oruvaraana Thaevaa Kiristhunaathaa -engal
Munnavaa Sathya Vaethaa
Poovil Emakkuthavi Yaarumillai Em Thaathaa – Yaesu
Punnnniyanae Maa Neethaa -ingu
Nannnuvaay Meyp Pothaa – Thayai
Pannnuvaay Vinothaa
Maevi Unatharulai Eevaay Ivveettin Meethu
Jeevanae Yaesu Konae – Aelaip
Paavikal Meetpan Thaanae
Vinthaiyudan Kalippum Santhamudan Unndaaka – Athi
Maenmaiyudan Sinaekam
Anthamudan Peruki Enthap Paavamum Aeka – Entum
Aththano Dura Vaaka – Jepa
Thunthumikal Mulanga – Aikyam
Panthamudan Ilanga,
Thanthaip Paranae Intu Untan Arul Niraivaaych
Sonthamudan Eevaayae – Ivar
Santhatham Vaala Neeyae
Ingu Vasikkum Mattum Thungan Molik Kisainthae -paran
Ishdappati Nadanthae
Angam Manathu Yaavum Pangam Intith Thodarnthae -ivar
Anuthinamum Makilnthae -uyar
Ampara Veettil Sernthu -miku
Kempeeramaaka Vaalnthu
Pungamudan Nithamum Thangi Yaesu Paranil
Ingithamaayk Konndaada -nitham
Mangalak Kavi Paada
Deva Ivveetil Indre - தேவா இவ்வீட்டில் இன்றே
Reviewed by Christking
on
June 27, 2020
Rating:
No comments: