சத்திய வார்த்தை - வசனம் :- 1 பேது 5:5
பெருமையுள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார். தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்.
பொருள்
அன்பானவர்களே, சகலத்திற்கும் மேலாக நாம் மனத் தாழ்மையைக் காத்துக் கொள்வது அவசியமானது. நம்முடைய பார்வையில் நாம் ஒன்றுமில்லாதவன் என்ற எண்ணம் தோன்ற வேண்டும். அப்பொழுது தான் தேவன் நம்மைக் கிருபையாய் நடத்துவார். நம் விசுவாசம் பரீட்சிக்கப்படும் போது அவர் நம்மை விட்டு விடுகிறார். அவருடைய ராஜ்ய சேவையில் இன்று சற்று உயர்த்தப்பட்டு உற்சாகப்படுத்தப் பட்டால், மன மேட்டிமை அடையாமல் தாழ்மையுடனும், பணிவுடனும் நான் ஒன்றுமில்லாதவன் என்றும், தேவனே என்னை நடத்துகிறார் என்றும் உணர வேண்டும். அதோடு நாம் சீர் பொருந்தினவர்களாக நடக்க, பின்னர் நமக்கு ஏற்படும் நிந்தைகளைப் பொறுமையுடன் சகிக்கவும் தயாராக இருக்க வேண்டும். முன்னே உயர்த்தப்பட்டு பின்னர் நிந்தை வரும் போது பொறுமையை இழந்து போவாயானால், நீ ஆவிக்குரியபடி இன்னும் பூரணப்படவில்லை என்பதை உணர்ந்து கொள். (1 பேது. 5:6-10; எபே. 4:1-3 )
புது சிருஷ்டியின் ஐக்கியம் | ஊழியர் . V. சுகின்ராபிக்
சத்திய வார்த்தை - வசனம் :- 1 பேது 5:5
Reviewed by Christking
on
June 14, 2020
Rating:
No comments: