நீதியின்மேல் பசிதாகம்! | Thirst for Righteousness!
- TAMIL
- ENGLISH
"நீதியின் மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் திருப்தியடைவார்கள்" (மத். 5:6).
தாகமும், பசியும் ஆரோக்கியத்தின் அடையாளங்கள்! ஜீவனின் அடையாளமும் கூட! அநேகர் பசியில்லாமல் டாக்டரிடம் போய் பல ஆயிரம் ரூபாய்களை செலவழித்து பசியெடுக்கும்படியாக மருந்து சாப்பிடுகிறார்கள். பசி இல்லாமையும், அஜீரணமும் நோயின் அறிகுறிகள் அல்லவா?
அதுபோலவே ஆவிக்குரிய வாழ்க்கையிலும், ஆவிக்குரிய பசியும், தாகமும் உங்களுக்கு இருக்க வேண்டியது அவசியம். வேத வசனத்தின்மேல், ஜெப வாழ்க்கையின் மேல், தேவனுடைய பிள்ளைகளின் ஐக்கியத்தின்மேல், கர்த்தருடைய ஆலயத்தின் மேல் பசிதாகம் உங்களுக்கு இருப்பது அவசியம். அவை ஆரோக்கியமான ஆவிக்குரிய வாழ்க்கையை காண்பிக்கின்றன.
மட்டுமல்ல, கிறிஸ்து இன்னொரு காரியத்தையும் உங்களுக்கு அருளியிருக்கிறார். அது நீதியின் மேலுள்ள பசிதாகம். கிறிஸ்துவின் நீதியை சுதந்தரித்துக் கொள்ள வேண்டுமே, அவருடைய நீதியின் பரிபூரணத்திற்குள் வரவேண்டுமே என்கிற பசிதாகம். வேதம் சொல்லுகிறது, "அவரே தேவனால் நமக்கு ஞானமும், நீதியும், பரிசுத்தமும், மீட்புமானார்" (1 கொரி. 1:31).
ஒரு பழங்காலத்து கதையை கேள்விப்பட்டிருப்பீர்கள். கொலை செய்த தம்பிக்காக அண்ணன் தூக்கிலே தொங்கினான். அண்ணன் தூக்கிலே தொங்குவதற்கு முன்பு தம்பியைப் பார்த்து "தம்பி, உன்னுடைய இரத்தக் கறை படிந்த வஸ்திரத்தை நான் தரித்துக் கொண்டிருக்கிறேன். என் தூய்மையான வஸ்திரத்தை உனக்கு தரிப்பித்திருக்கிறேன். அதை மீண்டும் கறைபடுத்தி விடாதே" என்று சொன்னானாம்.
கிறிஸ்துவும்கூட இதைத்தான் உங்களுக்கு செய்தார். உங்களுடைய பாவங்கள், சாபங்கள், அக்கிரமங்கள் ஆகியவற்றால் கறைபட்ட வஸ்திரத்தை அவர் தன்மேல் ஏற்றுக் கொண்டு, கல்வாரிச் சிலுவையில் மரித்து, தன்னுடைய நீதியின் வஸ்திரத்தை உங்களுக்குத் தரிப்பித்தார். பாவம் அறியாத அவர் உங்களுக்காக பாவமானார். குற்றம் அறியாத அவர் உங்களுக்காக குற்றமானார் (1 பேதுரு 2:23). வஞ்சனை இல்லாத அவர் உங்களுக்காக வஞ்சகர் என குற்றம் சாட்டப்பட்டார். அவரிடத்தில் ஒரு குற்றத்தையும் அறியேன் என்று அவரை விசாரித்த பிலாத்து சாட்சி கூறினார் (யோவான் 19:4,5).
அந்த கிறிஸ்து தன்னுடைய நீதியை உங்களுக்குத் தருகிறார். யார் யார் அவரை நோக்கிப் பார்த்து, ‘ஆண்டவரே என்னை நீர் நீதிமானாக்கமாட்டீரா, என்னை பரிசுத்தமாக்கமாட்டீரா’ என்று கதறுகிறார்களோ அவர்களுக்கு கிறிஸ்துவே நீதியாக நின்று வழி நடத்துகிறார்.
கர்த்தருடைய நீதியை நீங்கள் ஒன்றிரண்டு நாட்களல்ல, உங்கள் ஆயுள் நாளெல்லாம் தரித்துக்கொள்ளுகிறீர்கள். அவருடைய நீதி உங்களை நித்திய நித்தியமாய் தொடருகிறது. அது பரலோக ராஜ்யம் வரைக்கும் எட்டுகிறது. தேவ பிள்ளைகளே, உங்களுக்கு நீதியின் வஸ்திரத்தை தரிப்பிக்கும் கர்த்தரை நன்றியோடு ஸ்தோத்தரிப்பீர்களா?
நினைவிற்கு:- "கர்த்தர் கிருபையும் நீதியுமுள்ளவர், நம்முடைய தேவன் மன உருக்கமானவர்" (சங். 116:5).
“Blessed are those who hunger and thirst for righteousness, for they shall be filled” (Mathew 5:6).
Thirst and hunger are the signs of health; also the signs of life. Many people who do not get hunger visit doctors and spend thousands of Rupees for the purpose. Is not lack of hunger and indigestion signs of sickness?
Similarly, in the Spiritual life too, Spiritual hunger and thirst are essential for you. You must have hunger and thirst in the Scripture, in the prayerful life, in the fellowship of the children of God and the church of God. They indicate a healthy Spiritual life.
Not only that. Christ has graciously given you one more thing. It is the hunger and thirst over justice. The hunger and thirst over the inheritance of the justice of Christ, over the longing that we should come into the perfection of His justice. The Scripture says, “Christ Jesus, who became for us wisdom from God—and righteousness and sanctification and redemption” (I Corinthians 1:31).
You might have heard an ancient story. An elder brother was taken to the gallows for the sake of the younger brother who had actually committed a murder. Before getting hanged, the elder brother told the younger brother, Brother, I am wearing your garment with blood stain and I have given you my clean garment. Let it not get stained again. ."
This is what God did for you. He accepted the garment stained by your sins, curses and iniquities, died on the Cross of Calvary and He clothed you with the robe of righteousness. One who did not know sin became sin for you. One who did not know the crime became a crime for you. One who did not know deceit was accused as a deceiver. Pilate who enquired witnessed that he found no fault with him (John 19:4, 5).
That Christ is giving His righteousness to you. Whoever looks up to Him and bawl saying "God, will you not make me righteous? Will you not make me holy?" Christ stands as righteous and guides them.
You are wearing the righteousness of Christ not for a day or two but for the whole of your lifetime. His righteousness follows you forever and ever. It reaches up to the heavenly Kingdom. Dear children of God, will you praise God with gratitude for clothing you with the garment of righteousness.
To meditate: “Gracious is the Lord and righteous; yes, our God is merciful” (Psalm 116:5).
நீதியின்மேல் பசிதாகம்! | Thirst for Righteousness!
Reviewed by Christking
on
April 25, 2020
Rating:
No comments: