Naan Ummai Padida - நான் உம்மை பாடிட :- Robert Roy - Christking - Lyrics

Naan Ummai Padida - நான் உம்மை பாடிட :- Robert Roy



நான் உம்மை பாடிட பாத்திரன் அல்லவே
நீர் என்னை தேடிட பரிசுத்தன் அல்லவே-2
தேடி ஓடி ஆற்றி தேற்றி அள்ளி அணைத்த தெய்வமே
மார்பில் என்னை சேர்த்துக்கொண்ட மாறிடாத இராஜனே

என்ன கிருபை இது என்னை வாழ செய்தது
என்ன புதுமை இது என்னை பாட செய்தது-2
ஓ ஓ ஓ ஓசன்னா ஆ ஆ ஆ அல்லேலூயா-2

1.ஒவ்வொரு நாளிலும் கிருபைகள் புதியதே
வாழ்ந்திடும் நாள் எல்லாம் அது மிக நல்லதே-2
குருசில் தொங்கி இரத்தம் சிந்தி மீட்பு தந்த இயேசுவே
பிள்ளை என்னை உந்தன் பாதம் சேர்த்து கொள்ளும் தகப்பனே

என்ன கிருபை இது என்னை வாழ செய்தது
என்ன புதுமை இது என்னை பாட செய்தது-2
ஓ ஓ ஓ ஓசன்னா ஆ ஆ ஆ அல்லேலூயா-2

2.பாவத்தில் வாழ்ந்த என்னை பரிசுத்தமாக்கினீர்
அன்புடன் தேடி வந்து கிருபையால் காக்கின்றீர்-2
கனிந்து உருகி பரிந்து பேசி மீட்டுக்கொண்ட இயேசுவே
பிள்ளை நானும் புவியில் வாழ இந்த கிருபை போதுமே

என்ன கிருபை இது என்னை வாழ செய்தது
என்ன புதுமை இது என்னை பாட செய்தது-2
ஓ ஓ ஓ ஓசன்னா ஆ ஆ ஆ அல்லேலூயா-2


English


Naan Ummai Padida - நான் உம்மை பாடிட :- Robert Roy Naan Ummai Padida - நான் உம்மை பாடிட :- Robert Roy Reviewed by Christking on March 13, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.