Anaathi Anbu - அநாதி அன்பினாலே :- Johnathan - Christking - Lyrics

Anaathi Anbu - அநாதி அன்பினாலே :- Johnathan



அநாதி அன்பினாலே பிரித்தீரே
உம் சாயலாய் வாழ்ந்திட
நானல்ல எனக்குள் நீரே வாழ்வதினால்
என் உள்ளம் மகிழுதே

நிலை இல்லா எந்தன் வாழ்வில்
நிலையான உறவானீர்
தள்ளினோர் முன்னிலையில்
ஆயிரங்களை ஆசீர்வதித்தீர் (2)

கருவில் தோன்றின நாள் முதல்
இந்நாள் வரை என்னை மறக்கவில்லை (2)
படைப்பின் காரணர் நீரே
உந்தன் சித்தம் போல் நடத்துகின்றீர் (2) - நிலை இல்லா

சிறுமையும் எளிமையுமான
என்னுள் மேலான தரிசனம் துவங்கினீரே (2)
உயிர் வாழும் நாளெல்லாம்
உம் சாயலை பிரதிபலிப்பேன் (2) -நிலை இல்லா


English


Anaathi Anbu - அநாதி அன்பினாலே :- Johnathan Anaathi Anbu - அநாதி அன்பினாலே :- Johnathan Reviewed by Christking on February 15, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.