Rastchippu Vanthathu - இரட்சிப்பு வந்தது யாராலே :- Mugesh | Alwyn.M - Christking - Lyrics

Rastchippu Vanthathu - இரட்சிப்பு வந்தது யாராலே :- Mugesh | Alwyn.M



இரட்சிப்பு வந்தது யாராலே
பாவம் தொலைந்தது யாராலே
நிம்மதி வந்தது யாராலே
அன்பு மலர்ந்தது யாராலே-2

இயேசு பிறந்ததினாலே
மீட்பர் இயேசு பிறந்ததினாலே-2
இரட்சிப்பு வந்தது யாராலே

1.மாட்டுத்தொழுவில் மனிதனாக
வந்து பிறந்த இயேசுவினை
வாழ்த்தி வணங்கி நின்றனர்
மேய்ப்பர் கூட்டம் இராவிலே-2

பரம சேனை பாடி போற்றி
நல்ல செய்தி கூறினாரே-2
உன்னதத்தில் தேவனுக்கு மகிமை
பூமியில் சமாதானம்-2
இரட்சிப்பு வந்தது யாராலே

2.மண்ணிலே மனித வாழ்க்கை
வாடகை வீடு போல தான்
மரிக்கும் முன்னமே மனம் திரும்பி
மன்னவன் இயேசுவை ஏற்றுக்கொள்

இன்றைக்கு மரித்தால் மோட்சம் போவேன்
நம்பிக்கை உண்டா நண்பனே உனக்கு-2
இயேசு தருவாரே உனக்கு
இயேசு தருவாரே
பெற்றுக்கொள்ளுவாயே இன்று
பெற்றுக்கொள்ளுவாயே

இரட்சிப்பு வந்தது யாராலே
பாவம் தொலைந்தது யாராலே
நிம்மதி வந்தது யாராலே
அன்பு மலர்ந்தது யாராலே-2

இயேசு பிறந்ததினாலே
மீட்பர் இயேசு பிறந்ததினாலே-2
இரட்சிப்பு வந்தது யாராலே


English


Rastchippu Vanthathu - இரட்சிப்பு வந்தது யாராலே :- Mugesh | Alwyn.M Rastchippu Vanthathu - இரட்சிப்பு வந்தது யாராலே :- Mugesh | Alwyn.M Reviewed by Christking on December 16, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.