Param Irangi - பரம் இறங்கி - Christking - Lyrics

Param Irangi - பரம் இறங்கி



பரம் இறங்கி வந்த ராஜனே
வரம் கொடுக்க வந்த மீட்பரே
உலகத்தையே ஈன்ற உந்தன் குரல்
இதயத்தையே மீட்கும் உன்னின் தழல்

உயிரும் நீயே ஆவாய்
வழியும் நீயே ஆவாய்
வாய்மையும் நீயே என்று
அனுதினம் வானம் பூமி போற்றுதே

1) வலி கொடுத்திடும்
குளிர் அடித்திட அன்னை
மடியினின் தவழ்ந்ததும் எனே!
உயிர் எடுத்திடும் பலி படைத்திட
பாவ பழியதை சுமந்ததும் எனே!

முவ்வுலகை ஆளும் ராஜன்
மூவடிவில் தாங்கும் தேவன்
இவ்வுலக மாந்தர்காக
பிறந்தது அதிசயமே!
மனுகுலம் பிழைத்திடவே


English


Param Irangi - பரம் இறங்கி Param Irangi - பரம் இறங்கி Reviewed by Christking on December 18, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.