Kirubayaal - கிருபையால் :- Johnson - Christking - Lyrics

Kirubayaal - கிருபையால் :- Johnson



கிருபையால் வாழ்வதால்
கிருபைக்காய் நன்றி சொல்கிறேன்
உம் தயவினால் நிலை நிற்பதால்
உம் தயவை எண்ணி பாடுகிறேன்-2

1.பயங்கரமான பயங்கரமான.. ஓ ஓ..
பயங்கரமான குழியில் இருந்து
தூக்கி எடுத்தாரே கிருபையினால்
கன்மலை மீது என் கால்களை நிறுத்தி
உறுதிப்படுத்தினார் நிரந்தரமாய்-2

உம் கிருபையால் இதுவரை வாழ்ந்தேனய்யா
உம் தயவினால் இனிமேலும் வாழ்வேனய்யா-2

2.குறைவாக வாழ்ந்தேனய்யா
நிறைவாக மாற்றினீரே
நன்மையும் கிருபையும்
என்னை தொடர செய்தீரே-2

உம் கிருபையால் இதுவரை வாழ்ந்தேனய்யா
உம் தயவினால் இனிமேலும் வாழ்வேனய்யா-2

3.ஒன்றிற்கும் உதவா என்னை
தேடியே வந்தீரய்யா
கீர்த்தியும் புகழ்ச்சியும்
என்னை சூழ செய்தீரே-2

உம் கிருபையால் இதுவரை வாழ்ந்தேனய்யா
உம் தயவினால் இனிமேலும் வாழ்வேனய்யா-2

கிருபையால் வாழ்வதால்
கிருபைக்காய் நன்றி சொல்கிறேன்
உம் தயவினால் நிலை நிற்பதால்
உம் தயவை எண்ணி பாடுகிறேன்-2


English


Kirubayaal - கிருபையால் :- Johnson Kirubayaal - கிருபையால் :-  Johnson Reviewed by Christking on November 10, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.