En Naavil - என் நாவில் :- Jayden Daniel Stanley - Christking - Lyrics

En Naavil - என் நாவில் :- Jayden Daniel Stanley



என் நாவில் நீர் தந்த வரங்கள்....மிகவும் சிரமமான க்ளாஸிக்கல் பாடல்...ஒரு உயரமான பனிச்சிகரத்தில் எளிதாய் ஏறுகிற சாகஸ வீரன் போல இத்தனை சிக்கலான பாடலை மிகவும் சரளமாய் ஒரு கனிமரத்தின் பழங்களை காற்று உதிர்ப்பது போல பாடுகிற சிறுவன் ஜேடனை நினைத்தால் நிறைய பொறாமையா இருக்கு....எத்தனை அழகான பாவங்கள்...உன்னதமான உச்சரிப்புகள்...

கிறிஸ்தவப் பாடல் உலகில் அரிதாய் கேட்கிற கர்நாட்டிக் இசைஆலாபனைகள்....சேண்டர்ஸ் அற்புதமான பல இசைக் கோர்வைகளை உருவாக்கி அசத்தியிருக்கிறார்.......ரிதங்கள் செவிக்கு விருந்துகள்....

எடிட்டிங் பால் சரவணன்....ஒரு பட்டுத் துணியை வெட்டி ஒட்டி ஒரு பிள்ளைக்கான சொக்காவாய் உருமாற்றும் தேர்ந்த தையல் கலைஞனாய் பாடலை பதப்படுத்தி இதப்படுத்தி பார்வைக்கு ஒரு பிரமாண்ட விருந்தாய் மாற்றியிருக்கிறார்..வாழ்த்துக்கள்.

தனது மகன் ரெக்கார்டிங் தியேட்டருக்குள் பாடுவதை ஆர்வமாய் பார்க்கிற அந்த அன்னையின் தாய்ப்பாசத்திலேயே பாடல் வெற்றி பெற்று விட்டது..ஒரு தோட்டக்காரன்நட்டு வைத்த நல்ல மரங்களுள் ஒரு ஆப்பிள் மரத்தைப் போல இந்த ஆல்பம் “நீர் தந்த ஸ்வரங்கள்“ பலரையும் பரவசப்படுத்திக் கொண் டஉள்ளது..அந்த அல்பத்தின் பாடல்களுள் இது ஒரு அற்புதம் .இசையின் அதிசயம்..ஸ்வரங்கள் அமைக்கும் ஸ்வர்க்கக் கூட்டணி.. வாழ்த்துக்கள்.


English


En Naavil - என் நாவில் :- Jayden Daniel Stanley En Naavil - என்  நாவில் :- Jayden Daniel Stanley Reviewed by Christking on November 10, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.