En Aadharamae - என் ஆதாரமே :- Nova Edwin
Song: | En Aadharamae |
Album: | Single |
Lyrics & Tune: | Nova Edwin |
Music: | Vicky Gideon |
Sung by: | Nova Edwin |
- Tamil
- English
கருவினிலே என்னை கண்டவரே
நீரே என் ஆதாரமே-2
1.யார் என்னை மறந்தாலும்
யார் என்னை வெறுத்தாலும்
நீர் என்னை என்றும் மறவீரே
யார் என்னை பகைத்தாலும்
யார் என்னை சபித்தாலும்
ஒருபோதும் என்னை மறவீரே
ஆயிரம் பதினாயிரம் அணுகாது
இன்னல்கள் துன்பங்கள் நெருங்காது-2
யேகோவா தேவன் நீர் என்னோடு-2
2.தாயின் அன்பு மறந்தாலும்
தந்தை அன்பு குறைந்தாலும்
உம் அன்பில் மாற்றம் இல்லையே
உறவுகள் உதறினாலும்
உயிர் நண்பன் பிரிந்தாலும்
பிரியா உம் சிநேகம் போதுமே
காயங்கள் பல நூறு அடைந்தாலும்
கண்ணீரே உணவாக அமைந்தாலும்-2
காக்கும் வல்ல தேவன் நீர் என்னோடு-2
3.எதிரிகள் சூழ்க்கையிலே
கெர்ஜித்து நிற்கையிலே
மதிலாக நீர் என்னை காத்தீரே
என் சார்பில் நீர் நின்று
யுத்தத்தில் ஜெயம் தந்து
கன்மலை மேல் உயர்த்தி வைத்தீரே
உம்மாலே சேனைக்குள் பாய்வேனே
உம்மாலே மதிலையும் தாண்டுவேன்-2
சர்வ வல்ல தேவன் உம் பெலனாலே-2-கருவினிலே
English
En Aadharamae - என் ஆதாரமே :- Nova Edwin
Reviewed by Christking
on
October 09, 2019
Rating:
No comments: