Varavenum Enatharasae - வரவேணும் எனதரசே : Namo Vol - 2 - Christking - Lyrics

Varavenum Enatharasae - வரவேணும் எனதரசே : Namo Vol - 2


வரவேணும் எனதரசே
மனுவேல், இஸ்ரவேல் சிரசே
வரவேணும் எனதரசே
மனுவேல், இஸ்ரவேல் சிரசே
அருணோதயமே ஒளிர் பிரகாசா
அசரீரி ஒரே சரு வேசா
அருணோதயமே ஒளிர் பிரகாசா
அசரீரி ஒரே சரு வேசா
வரவேணும் எனதரசே
மனுவேல், இஸ்ரவேல் சிரசே

1. வேதா கருணாகரா மெய்யான பராபரா
ஆதார நிராதரா அன்பான சகோதரா
தாதாவும் தாய் சகலமும் நீயே
நாதா, உன் தாபரம் நல்குவாயே
தாதாவும் தாய் சகலமும் நீயே
நாதா, உன் தாபரம் நல்குவாயே
வரவேணும் எனதரசே
மனுவேல், இஸ்ரவேல் சிரசே

2. படியோர் பவ மோசனா, பரலோக சிம்மாசனா
முடியாதருள் போசனா, முதன் மாமறை வாசனா
இடையர் குடிலிடை மேவி எழுந்தாய்
இமையவர் அடி தொழு மேன்மையின் எந்தாய்
இடையர் குடிலிடை மேவி எழுந்தாய்
இமையவர் அடி தொழு மேன்மையின் எந்தாய்
வரவேணும் எனதரசே
மனுவேல், இஸ்ரவேல் சிரசே

3. வானோர் தொழும் நாதனே, மறையாகம போதனே
கானாவின் அதீதனே, கலிலேய வினோதனே
ஞானாகரமே, நடு நிலை யோவா
நண்பா, உனத நன்மையின் மகா தேவா
ஞானாகரமே, நடு நிலை யோவா
நண்பா, உனத நன்மையின் மகா தேவா

வரவேணும் எனதரசே
மனுவேல், இஸ்ரவேல் சிரசே
வரவேணும் எனதரசே
மனுவேல், இஸ்ரவேல் சிரசே
அருணோதயமே ஒளிர் பிரகாசா
அசரீரி ஒரே சரு வேசா
அருணோதயமே ஒளிர் பிரகாசா
அசரீரி ஒரே சரு வேசா
வரவேணும் எனதரசே
மனுவேல், இஸ்ரவேல் சிரசே


Varavenum Enatharasae - வரவேணும் எனதரசே : Namo Vol - 2 Varavenum Enatharasae - வரவேணும் எனதரசே : Namo Vol - 2 Reviewed by Christking on May 07, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.