Uthithare Nalla Meipar - உதித்தாரே நல்ல மேய்ப்பர் :: Athisayam Vol - 7 - Christking - Lyrics

Uthithare Nalla Meipar - உதித்தாரே நல்ல மேய்ப்பர் :: Athisayam Vol - 7


உதித்தாரே நல்ல மேய்ப்பர் புல்லணை மீதினிலே
விண்ணகம் துறந்து மண்ணகம் வந்த இம்மானுவேலன் இவர் தானே - (2)

விண்ணிலே தேவனுக்கே மகிமை பூமியிலே நல் சமாதானம்
மனிதர் மேல் பிரியமும் இன்றும் என்றும் உண்டாவதாக - உதித்தாரே

1) மந்தையைக் காத்த மேய்பப்ர்களும் சிந்தையில் சிறந்த ஞானியரும்
பாலனை சென்று பணிந்தனரே நல் காணிக்கை அவருக்குப் படைத்தனரே
உன்னையும் என்னையும் மீட்டிடவே பூமியில் வந்த அதிசயமே
எண்ணிலடங்கா நன்றியுடன் அவரைப் போற்றி துதித்திடுவோம் - உதித்தாரே

2) அன்பே அவரின் திருமொழியாம் பண்பில் சிறந்த போதகராய்
நம்மை அணைத்துக் காத்திடவே ஏழையின் கோலம் எடுத்தாரே
விண்ணவர் வாழ்த்தொலி கேட்கிறதே எண்ணில்லா ஆனந்தம் பெருகிடுதே
வல்லவர் இயேசு பிறந்த நாளில் வாழ்த்துக்கள் சொல்லியே மகிழ்ந்திடுவோம் - உதித்தாரே


Uthithare Nalla Meipar - உதித்தாரே நல்ல மேய்ப்பர் :: Athisayam Vol - 7 Uthithare Nalla Meipar - உதித்தாரே நல்ல மேய்ப்பர் :: Athisayam Vol - 7 Reviewed by Christking on December 12, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.