Um Siththam - உம் சித்தம் :: Aaron - Christking - Lyrics

Um Siththam - உம் சித்தம் :: Aaron


உம் சித்தம் நிறைவேற ஒப்புவித்தேன் என்னை
எடுத்து நீர் பயன்படுத்தும்
உம் கிருபை எனை சூழ எந்நாளும் உம்மைப்போற்ற
மகிமையாய் என்னை நடத்தும்

நீரே என்னை உயர்த்தினீர்
நீரே என்னை தாங்கினீர்
நீரே என்னை தேற்றினீர்
நீரே நீர் ஒருவரே-2

1.தனிமையின் நாட்களில்
கலங்கிய போதெல்லாம்
நீரே உம் கரத்தால் என்னை தாங்கினீர்
வறுமையின் வேளையில் வாடிய போதெல்லாம்
நீரே உம் கரத்தால் என்னை போஷித்தீர்-2
என் பிறப்பிற்கும் என் வாழ்விற்கும்
என் எல்லாவற்றிற்கும் காரணர் நீர் ஒருவரே

நீரே என்னை உயர்த்தினீர்
நீரே என்னை தாங்கினீர்
நீரே என்னை தேற்றினீர்
நீரே நீர் ஒருவரே

2.வாழ்க்கையின் ஓட்டத்தில்
ஓடிய நாளெல்லாம்
நீரே உம் பெலத்தால் என்னை நடத்தினீர்
தோல்வியின் தருணத்தில்
வீழ்ந்த நாள் எல்லாம்
நீரே உம் பெலத்தால் என்னை நிறுத்தினீர்-2
எல்லா கனத்திற்கும் எல்லா மகிமைக்கும்
என் எல்லா அன்பிற்கும் பாத்திரர் நீர் ஒருவரே

நீரே என்னை உயர்த்தினீர்
நீரே என்னை தாங்கினீர்
நீரே என்னை தேற்றினீர்
நீரே நீர் ஒருவரே-உம் சித்தம்


Um Siththam - உம் சித்தம் :: Aaron Um Siththam - உம் சித்தம் :: Aaron Reviewed by Christking on December 31, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.