Thalaelo - தலேலோ ::Tamil Christmas Song - Christking - Lyrics

Thalaelo - தலேலோ ::Tamil Christmas Song


சோதிமணி பெட்டகமே சுடர் ஒளியே – 2
(அரிய வகை ரத்தின பேட்டகமே பிரகாசமான ஒளியே)

யூதருக்கு ஆதிமகனாய் பிறந்த அருந்தவமே - 2
(சிறந்த தவமாய் பிறந்த யுதரின் முதல் மகனே)

தாலேலோ தாலேலோ
(ஆரிராரோ ஆரிராரோ)

தல தலே தலே தலே தலேலோ - 2

தச்சனுக்கு பிள்ளையென்றும்
(தச்சன் (மரவேலை செய்பவர்) பிள்ளையென்றும்)

தாய் ஒருத்தி கன்னியென்றும்
(கன்னி குமரியின் மகன் என்றும்)

இச்சனங்கள் சொன்னாலும் இறைவானது திருகுமரா
(இந்த மக்கள் சொன்னாலும் இறைவனின் திருக்குமரா)

நல்ல குறிகளெல்லாம் நான் பார்க்க தோணுதையா
(நல்ல அறிகுறிகள் நான் பார்க்க தோணுகிறது)

வல்லவராம் உன் தந்தை மனதில் என்ன வைத்தாரோ
அன்பில் பிறந்தவனே அருமை திருமகனே
என் வீட்டு பேர் ஒளியை ஏற்ற வந்த திருவிளக்கே
(என் வீட்டின் பெரிய ஒளியை ஏற்ற வந்த திரு விளக்கே)

தாலேலோ தாலேலோ
(ஆரிராரோ ஆரிராரோ)

தல தலே தலே தலே தலேலோ - 2


Thalaelo - தலேலோ ::Tamil Christmas Song Thalaelo - தலேலோ ::Tamil Christmas Song Reviewed by Christking on December 21, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.