Sollum Sollum Enakku - சொல்லும் சொல்லும் எனக்கு Song From Album : Belan Vol 5

Song: | Sollum Sollum Enakku |
Album: | Belan 5 |
Lyrics, Tune & Sung by: | John & Vasanthy |
Music: | Gem Gabriel |
சொல்லும் சொல்லும் சொல்லும்
எனக்கு ஆலோசனை சொல்லும் - (2)
எந்த பக்கம் வலையை வீச
சொல்லும் சொல்லும் சொல்லும்
எனக்கு ஆலோசனை சொல்லும் - (2)
1) இராவெல்லாம் வலை வீசி சோர்ந்து போயி நின்னேனே
மீன் ஒன்னும் கிடைக்காம வெறுங்கையா வந்தேனே - (2)
சொல்லும் சொல்லும் சொல்லும் எனக்கு ஆலோசனை சொல்லும்
எந்த பக்கம் வலையை வீச, எனக்கு ஆலோசனை சொல்லும்
2) ஊரெல்லாம் பஞ்சமாச்சு எகிப்துக்கு நான் ஓடட்டுமா,
ஒரு பிடி விதை போட்டா நூறு மடங்கு தருவீரா? - (2)
சொல்லும் சொல்லும் சொல்லும் எனக்கு ஆலோசனை சொல்லும்
எந்த இடத்தில் தங்கிட நான், எனக்கு ஆலோசனை சொல்லும்
3) ஏறெடுத்துப் பார்க்கையிலே அழகாகத் தோணுதய்யா
சோதோமும் கொமோராவும் இருப்பது எனக்குத் தெரியலையே- (2)
சொல்லும் சொல்லும் சொல்லும் எனக்கு ஆலோசனை சொல்லும்
எந்த பக்கம் நடையக் கட்ட, எனக்கு ஆலோசனை சொல்லும்
Sollum Sollum Enakku - சொல்லும் சொல்லும் எனக்கு Song From Album : Belan Vol 5
Reviewed by Christking
on
October 15, 2018
Rating:

No comments: