Rajathi Rajan Ivar Than - ராஜாதி ராஜன் இவர் தான்

Song: | Rajathi Rajan Ivar Than |
Artist: | Jagadeesh |
Album: | Unnadhar Piranthaar |
Licensed: | D.K. Enterprises |
ராஜாதி ராஜன் இவர் தான்
புவி வந்தாழும் மன்னன் இவர் தான் (2)
மண் மீது சாபத்தை தீர்த்திடவே
மாசற்ற ஜோதியாய் வந்துதித்த
மன்னாதி மன்னவனை வணங்கிடுவோம் - ராஜாதி
1) கர்த்தாதி கர்த்தனே. இளம் தளிரே
வந்தனம் வந்தனமே
சர்வேச நாதனே சர்குணனே
சுந்தர நாயகனே
உள்ளம் தேற்றிடும் உண்மை நேசனே
இறைமகன் இயேசுவே
மனுக்குலம் போற்றும் மகிமையின் நாதன்
உம் பாதம் பணிந்திடுவோம் - ராஜாதி
2) அருள்நேசர் வரவால் அகமகிழ்வோம்
அன்புடன் உள்ளத்திலே
அதிகாலைப் பொழுதில் தொழுதிடவே
ஆலயம் சென்றிடுவோம்
வானில் பறவைகள் கானம் பாடிட
வீணையின் ராகமே
பனித்துளி மின்னும் மலர்களின் வாசம்
இல்லத்தில் புதுமணமே - ராஜாதி
Rajathi Rajan Ivar Than - ராஜாதி ராஜன் இவர் தான்
Reviewed by Christking
on
November 22, 2018
Rating:

No comments: