Aalosanai Sollum Deva - ஆலோசனை சொல்லும் தேவா Song From Album : Belan Vol 5

Song: | Aalosanai Sollum Deva |
Album: | Belan 5 |
Lyrics, Tune & Sung by: | John & Vasanthy |
Music: | Gem Gabriel |
ஆலோசனை சொல்லும் தேவா
அதிசயங்கள் செய்யும் ராஜா
வழி என்ன தெரியவில்லை
எது நன்மை புரியவில்லை - (2) - ஆலோசனை
1) கண்களின் பச்சை என்னை இழுத்துச் செல்லும் அழிவுக்கு
மனிதனின் ஆலோசனை முடிந்துவிடும் மரணத்தில் - (2)
வழி என்ன தெரியவில்லை
எது நன்மை புரியவில்லை - (2) - ஆலோசனை
2) காரிருள் சூழ்ந்ததினால் கண்கள் மங்கிப் போனதே
பலவித யோசனையால் தூக்கம் கலைந்து போகுதே - (2)
விடிந்திடும் நாள் எதுவோ?
விடுதலை தான் வருமோ? - (2) - ஆலோசனை
3) என் ஆத்துமாவே கலங்குவதும் ஏனோ?
உனக்குள் தியங்கி உருகுவதும் ஏனோ?
கர்த்தரை நோக்கியே நான் காத்திருப்பேன் காத்திருப்பேன்
இரட்சிப்பின் தேவனையே இன்னமும் நான் துதிப்பேன் - (2)
- ஆலோசனை
Aalosanai Sollum Deva - ஆலோசனை சொல்லும் தேவா Song From Album : Belan Vol 5
Reviewed by Christking
on
October 15, 2018
Rating:

No comments: