Ennai Kangindra Devanai - என்னைக் காண்கின்ற தேவனை

Album: | Vallavar |
Sung by: | Beryl Natasha |
Lyrics & Tune: | Joseph Vinoth @ Joevin |
Music: | Keba Jeremiah |
என்னைக் காண்கின்ற தேவனை கருத்தோடு தேடுவேன்
காலமெல்லாம் கண்மணிப் போல் உறங்காமல் காப்பவரை - (2)
என் மீது கண் வைத்து ஆலோசனை சொல்லுகிறீர்
உம் நல்ல வார்த்தையை....
உம் நல்ல வார்த்தையை தினமும் எனக்குத் தந்து
தவறாமல் என்னை நடத்துகிறீர் - என்னைக்
உன்னதமானவரின் நிழலில் தங்கிடுவேன்
வேடனின் கண்ணிக்கும்....
வேடனின் கண்ணிக்கும் பாழாக்கும் கொள்ளைநோய்க்கும்
விடுவிக்கும் தேவன் நீரல்லவோ - என்னைக்
உம்மண்டை காத்திருந்து புதுபெலன் அடைந்திடுவேன்
கழுகுகளைப் போல...
கழுகுகளைப் போல செட்டைகளை விரித்து
உயரே பறந்து எழும்பிடுவேன் - என்னைக்
Ennai Kangindra Devanai - என்னைக் காண்கின்ற தேவனை
Reviewed by Christking
on
October 16, 2018
Rating:

No comments: