Will Be Enlarged! - பெருகுவீர்கள்! :- Daily Devotions - Christking - Lyrics

Will Be Enlarged! - பெருகுவீர்கள்! :- Daily Devotions

"யாபேஸ் இஸ்ரவேலின் தேவனை நோக்கி: தேவரீர் என்னை ஆசீர்வதித்து, என் எல்லையைப் பெரிதாக்கி" (1 நாளா. 4:10).
கர்த்தருடைய வாக்குத்தத்தத்தின்படியே நீங்கள் பெருகுவீர்கள். உங்களுடைய எல்லைகள் பெரிதாகும், விருத்தியாகும். ஆசீர்வாதம் உங்களுக்கு உண்டாகும். நீங்கள் இப்போது இருக்கிறதைப் பார்க்கிலும் ஆயிரம் மடங்கு பெருகுவீர்கள். உங்கள் சொந்த வீட்டிலும், உங்கள் தொழில்களிலும், உங்களுடைய வேலைகளிலும், உங்களுடைய ஊழியத்திலும், கர்த்தர் நிச்சயமாகவே உங்களுக்கு ஒரு உயர்வைக் கொடுப்பார்.

யாபேஸ் என்ற பக்தன், குறுகிய எல்லைக்குள், குறுகிய மனதுக்குள் முடங்கிக் கிடக்க விரும்பவில்லை. வளர்ச்சியை விரும்பினார். பெருக்கமாய் ஆசீர்வதிக்கப்பட விரும்பினார். வியாபாரிகள், தங்கள் வியாபாரத்தின் எல்லைகள் விருத்தியடைய வேண்டுமென்று விரும்புகிறார்கள். செல்வந்தர்கள், ஒரு தொழிற்சாலையை ஆரம் பித்து, நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகள் தேசமெங்கும் பரவவேண்டுமென்று விரும்புகிறார்கள். தேவனுடைய பிள்ளைகளாகிய நீங்கள், உங்களுடைய எல்லை கள் விருத்தியாக வேண்டுமென்று விரும்பக்கூடாதா? உங்களுடைய ஊழிய எல்லைகள், ஜெபத்தின் எல்லைகள், தரிசனத்தின் எல்லைகள், விருத்தியாக வேண்டுமென்று வாஞ்சியுங்கள். மட்டுமல்ல ஜெபியுங்கள்.

ரெபெக்காளை அவளுடைய குடும்பத்தார் வாழ்த்தியபோது, "எங்கள் சகோதரியே,  நீ கோடாகோடியாய்ப் பெருகுவாயாக; உன் சந்ததியார் தங்கள் பகைஞருடைய வாசல்களைச் சுதந்தரித்துக்கொள்வார்களாக என்று ஆசீர்வதித்தார்கள்" (ஆதி. 24:60). மோசே இஸ்ரவேல் ஜனங்களை ஆசீர்வதிக்கும்போது, "நீங்கள் இப்பொழுது இருக்கிறதைப் பார்க்கிலும் ஆயிரமடங்கு அதிகமாகும்படி, உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சொல்லியபடியே உங்களை ஆசீர்வதிப்பாராக" (உபா. 1:11) என்று சொல்லி ஆசீர்வதித்தார்.

இன்று கர்த்தர் உங்களைப் பார்த்து, "உன் கூடாரத்தின் இடத்தை விசாலமாக்கு; உன் வாசஸ்தலங்களின் திரைகள் விரிவாகட்டும்; தடை செய்யாதே. உன் கயிறுகளை நீளமாக்கி, உன் முளைகளை உறுதிப்படுத்து. நீ வலதுபுறத்திலும், இடதுபுறத்திலும் இடங்கொண்டு பெருகுவாய்" (ஏசா. 54:2,3) என்று சொல்லுகிறார். எத்தனை அருமையான வாக்குத்தத்த வசனம் இது!

தேவபிள்ளைகளே, முதலாவது உங்களுடைய தரிசனத்தின் எல்லைகள் விரிவாகட் டும். உங்கள் கண்கள் குறுகிய பார்வையுடையவைகளாயிருந்தால், இப்பொழுது உங்கள் கண்களை ஏறெடுத்துப்பாருங்கள். உங்களுடைய தரிசனம், இந்தியா முழுவதையும் பற்றிப் பிடிக்கட்டும். 140 கோடி மக்களின் இரட்சிப்பைக் குறித்து, விரிவான தரிசனம் இருக்கட்டும்.

இந்தியாவைத் தாண்டி, உங்களுடைய தரிசனத்தின் எல்லைகள் நேபாளம், பாகிஸ்தான், பங்களாதேஷ் என்று விரிவடையட்டும். இதுவரை ஒன்றிரண்டு ஆத்துமாக்களை ஆதாயம் செய்திருந்தால், தேவனே, எனக்கு ஒரு கோடி ஆத்துமாக்களைத் தாரும் என்று கேளுங்கள். இதுவரை, ஒரு ஞாயிறு சிறுவர் பள்ளி நடத்தினால், இனிமேல் நூறு பள்ளிகள் நடத்த தீர்மானியுங்கள்.

தேவபிள்ளைகளே, எல்லைகள் விரிவாக வேண்டுமென்ற ஆசையோடு, ஜெபத் தோடு, தேசமெங்கும் நடந்திடுங்கள். விசுவாசத்தோடு அடியெடுத்து வைத்து, அதற் காக முயற்சித்து உழையுங்கள். ஊக்கமாக கிரியை செய்யுங்கள். எல்லாவற்றையும் கர்த்தர் வாய்க்கும்படிச் செய்வார்.

நினைவிற்கு:- "நீ எழுந்து தேசத்தின் நீளமும், அகலமும் எம்மட்டோ, அம்மட்டும் நடந்துதிரி; உனக்கு அதைத் தருவேன் என்றார்" (ஆதி. 13:17).

===Author=J=.=S=A=M==J=E=B=A=D=U=R=A=I====

And Jabez called on the God of Israel saying, “Oh, that you would bless me indeed and enlarge my territory…. (I Chronicles 4:10).
You will multiply in accordance with the promise of God. Your boundaries will expand and increase. Blessings will shower upon you. You would prosper multifold. God will certainly give you a higher reward in your own home, in your occupations, in your work and in your ministry.

Jabez, the devotee did not want to be confined to the narrow boundary and a narrow mind. He wanted growth and to be greatly blessed. Merchants want the prospects of their business to prosper. After installing one factory, the wealthy people prefer a growth of a hundred more such factories across the country. You are the children of God and in that case, why should not you like your boundaries to be extended? Wish that the boundaries of your ministry, prayer and vision are further extended. Further, pray for this.

When her family members greeted Rebekah, they blessed her saying, “Our sister, may you become the mother of thousands of ten thousand; and may your descendants possess the gates of those who hate them” (Genesis 24:60). When Moses wanted to bless the Israelites, he said, “May the Lord God of your fathers make you a thousand times more numerous than you are and bless you as He has promised you!” (Deuteronomy 1:11).

Today the Lord looks at you and says, “Enlarge the place of your tent and let them stretch out the curtains of your dwellings; Do not spare; lengthen your cords and strengthen your stakes. For you shall expand to the right and to the left and your descendants will inherit the nations and make the desolate cities inhabited” (Isaiah 54:2, 3). What a wonderful promise it is!

Dear children of God, firstly, let the borders of your vision be expanded. If your eyes are short-sighted, lift them up now and look. Let your vision cover entire India. Let your vision be clear about the Salvation of the 140 million people. Let your vision go beyond India and get extended to Nepal, Pakistan and Bangladesh. If you had thus far gained only one or two souls, ask God to give you a crore of souls. If you were conducting one Sunday School so far, decide now to run hundred more Sunday Schools.

Dear children of God, with the wish that your boundaries should be expanded, walk through the country with prayer. Work hard to achieve it. Act swiftly towards your aim. God will make everything happen.

To meditate: “ Arise, walk in the land through its length and its width, for I give it to you” (Genesis 13:17).

Will Be Enlarged! - பெருகுவீர்கள்! :- Daily Devotions Will Be Enlarged! - பெருகுவீர்கள்! :- Daily Devotions Reviewed by Christking on September 07, 2018 Rating: 5
Powered by Blogger.