Will Inherit! - சுதந்தரிப்பாய்! :- Daily Devotions
"நீ சுதந்தரிக்கப்போகிற தேசம், நீ விட்டுவந்த எகிப்து தேசத்தைப்போல் இராது" (உபா. 11:10).
கர்த்தர் கிருபையாய், இந்த புதிய மாதத்தை நமக்குத் தந்திருக்கிறார். நீங்கள், அதை உங்களுடையதாக்கி, சுதந்தரித்துக்கொள்ள வேண்டும். இந்த மாதம் கர்த்தர் உங்களுக்கு வைத்திருக்கிற வாக்குத்தத்தத்தையும், ஆசீர்வாதங்களையும் விசுவாசத்தோடு ஏற்று, சுதந்தரிக்கவேண்டும். ஒவ்வொருநாளும், கர்த்தருடைய கிருபை. ஒவ்வொரு மணி நேரமும், கர்த்தருடைய ஈவு.
"நீ சுதந்தரிக்கப்போகும் தேசம்" என்ற வார்த்தை, உபாகமத்தில், பதினெட்டு இடங்களில் வருகிறது. இஸ்ரவேலர், சுதந்தரிக்கப்போகிற கானானைக் குறித்த முதல் வெளிப்பாட்டை, கர்த்தர் ஆபிரகாமுக்குக் கொடுத்தார். "நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ" (ஆதி. 12:1) என்று சொன்னார். அது பாலும், தேனும் ஓடுகிற கானான் தேசம்.
ஆபிரகாமுக்கு, கானான் வாக்களிக்கப்பட்டது. அதை சுதந்தரித்துக்கொள்வதற்காக, அவர் தன் இனத்தையும், ஜனத்தையும், தன் ஊரையும், தகப்பன் வீட்டையும் விட்டு விட்டு, விசுவாசத்தோடு புறப்பட்டார். அதுபோல, இஸ்ரவேலர், அந்த கானானை சுதந்தரிக்க, எகிப்தாகிய அடிமைத்தனத்திலிருந்து புறப்பட்டார்கள்.
ஆபிரகாம் கானானுக்குள் பிரவேசிக்கும்போது, கர்த்தர் இரண்டு காரியங்களை ஆபிரகாமிடம் சொன்னார். முதலாவது, நீ கானானை சுதந்தரிக்க வேண்டுமென்றால், உன்னுடைய கண்களை ஏறெடுத்து, கிழக்கிலும், மேற்கிலும், தெற்கிலும், வடக் கிலும் நோக்கிப்பார்க்க வேண்டும். கண் காணும் பூமியை உனக்குத் தருவேன். இரண்டாவது, இந்த தேசம் முழுவதிலும் நீ சுற்றி நடக்க வேண்டும். கால் மிதித்து, "இது எனது" என்ற விசுவாசத்தோடு நடக்க வேண்டும். ஆகவே, அந்த கானானின் நீளம், அகலம் எவ்வளவு உண்டோ, அவ்வளவு தூரம் அவர் பிரயாணம் செய்தார்.
உண்மையிலேயே கானான் ஆசீர்வதிக்கப்பட்ட தேசம். அது, ஊராகிய கல்தேயர் தேசத்து பட்டணம் போலவோ அல்லது எகிப்தைப்போலவோ அல்லாமல், பாலும், தேனும் ஓடுகிற தேசமாயிருந்தது. கர்த்தர் சொன்னார், "நீங்கள் சுதந்தரிக்கப் போகிற தேசமோ, மலைகளும் பள்ளத்தாக்குகளுமுள்ள தேசம்; அது வானத்தின் மழைத் தண்ணீரைக் குடிக்கும் தேசம். அது, உன் தேவனாகிய கர்த்தர் விசாரிக்கிற தேசம். வருஷத்தின் துவக்கமுதல், வருஷத்தின் முடிவுமட்டும், எப்பொழுதும் உன் தேவ னாகிய கர்த்தரின் கண்கள், அதின்மேல் வைக்கப்பட்டிருக்கும்" (உபா. 11:11,12).
தேவபிள்ளைகளே, இந்த புதிய மாதத்தில், கர்த்தர் உங்களுக்கு சமாதானத்தையும், சந்தோஷத்தையும் வாக்களித்திருக்கிறார். பரம கானானையும், புதிய எருசலேமையும், பரலோக பாக்கியத்தையும் வாக்களித்திருக்கிறார். அதை சுதந்தரிப்பேன், என்ற, விசுவாசத்தோடு முன்னேறுங்கள். நீங்கள், நல்ல வருமானமுள்ள வேலையிலிருக்க வேண்டும். உங்கள் குடும்பம் செழிப்புள்ளதாயிருக்க வேண்டும். உங்கள் பிள்ளைகள் கொழுத்த கன்றுகள் போல, வளர வேண்டும். பிள்ளைகளுடைய எதிர்காலம் மிகவும் உயர்ந்ததாக இருக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.
இஸ்ரவேலர், கானானை சுதந்தரித்துக்கொண்டதுபோல, நீங்களும் இயேசுவின் நாமத்திலே, இம்மைக்குரிய ஆசீர்வாதங்களையும், ஆவிக்குரிய ஆசீர்வாதங்களையும் சுதந்தரித்துக்கொள்ளுங்கள். "பிரியமானவனே, உன் ஆத்துமா வாழுகிறதுபோல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன்" (3 யோவா. 2). இந்த மாதம் உங்களுக்கு மனுஷ தயவும், தேவ கிருபையும் நிறைந்ததாயிருக்கும்.
நினைவிற்கு:- "நேர்த்தியான இடங்களில் எனக்குப் பங்கு கிடைத்தது; ஆம், சிறப்பான சுதந்தரம் எனக்கு உண்டு" (சங். 16:6).
=======C=H=R=I=S=T=K-I=N=G=.=I=N=========
“For the land which you go to possess is not like the land of Egypt from which you have come” (Deuteronomy 11:10).
God has given us this month graciously. You have to inherit it as yours. God has kept many promises and blessings for you in this month and you have to accept them with faith. Every day given is God’s grace and every hour is God’s gift.
The words “The nation you will inherit” finds a place in eighteen instances in the book of Deuteronomy. God gave the first revelation of Israelites inheriting Canaan to Abraham. He said, “Get out ....to a land that I will show you” (Genesis 12:1). It was Canaan where honey and milk flew.
Abraham was promised with Canaan. In order to inherit it, he left his family, people and father’s house with faith. Similarly, the Israelites departed from the bondage of Egypt to inherit Canaan.
God told two things to Abraham when he was entering Canaan. Firstly, “If you want to inherit Canaan, lift your eyes toward the west, the north, the south, and the east and behold it with your eyes. I will give you the extent of land you see.” Secondly, He said, “Arise, walk in the land through its length and its width, for I give it to you.” Thus Abraham covered the whole of Canaan by walk.
Canaan is a blessed nation indeed. Unlike Ur of the Chaldeans or Egypt which were dry, Canaan was flourishing with milk and honey. God said, “but the land which you cross over to possess is a land of hills and valleys, which drinks water from the rain of heaven, a land for which the Lord your God cares; the eyes of the Lord your God are always on it, from the beginning of the year to the very end of the year” (Deuteronomy 11:11, 12).
Dear children of God, in this new month God has promised you peace and joy. He has promised you the heavenly Canaan, new Jerusalem and the heavenly pleasure. Move ahead with the faith of inheriting them. God wishes you to be in a lucrative job, your family should be prosperous, your children should grow like stall-fed calves and the future of your children should be very bright.
Inherit the blessings of this life and the Spiritual blessings too, in the Name of Jesus similar to how the Israelites inherited Canaan. “Beloved, I pray that you may prosper in all things and be in health, just as your soul prospers” (III John 1:2). For you, this month will be filled with favour from men and the grace of God.
To meditate: “The lines have fallen to me in pleasant places; Yes, I have a good inheritance” (Psalms 16:6).
Will Inherit! - சுதந்தரிப்பாய்! :- Daily Devotions
Reviewed by Christking
on
August 01, 2018
Rating: